காலை பொழுதுகளை இப்படி ஒரு புத்துணர்வு தரும் குளிர்பானத்துடன் தொடங்கினால், ஆரோக்கியமாகவும் செம்ம பீலா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பாதாம் – 2 டேபிள் ஸ்பூன்
முலாம்பழம் விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
கசகசா விதைகள்: 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – ¼ கப்
குங்குமப்பூ – 2 சிட்டிகை
துளசி- 4
பால்- 2 கப்
ஏலக்காய் பொடி
கருப்பு மிகளகுத்தூள்
பெருஞ்சீரகம் -1/4 கப்
செய்முறை:
ஊறவைத்த பாதம் பருப்பு, முலாம் பழ விதைகள், பெருஞ்சீரகம் ஆகியவற்றை ஊறவைத்து அதன் பிறகு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு கனமான பாத்திரத்தில், பால் அத்துடன் குங்குமப் பூ ஆகியவற்றை கொதிக்க வைக்கவும். தொடர்ந்து அத்துடன் சர்க்கரையை கரைக்கவும். தொடர்ந்து துளசி மற்றும் கருப்பு மிளகுத்தூள் ஆகியவற்றை அரைத்து பாலில் சேர்க்கவும். மேலும் ஏலக்காய் தூள், அரைத்து வைத்திருந்த பாதம் விழுதை இத்துடன் சேர்க்கவும். இதைத்தொடர்ந்து 3 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். தற்போது அதை ஆரவைத்து குளிர் சாதனப்பெட்டியில் வைக்கலாம்.