நாம் எப்போதும் தண்ணீர் மட்டும்தான் குடிக்கிறோம் என்று நினைத்து நாம் குடிக்கும் மற்ற பானங்களின் கலோரிகளை மதிப்பில் கொள்வதில்லை. இதனால் நாம் அதிக கலோரிகளை நமக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டே இருக்கிறோம்.
பழச்சாறுகள், குளிர்பானங்கள், ஸ்வீட் வையின் ஆகியவற்றை பருகுவோம். இதை நாம் முதலில் நிறுத்த வேண்டும். இதுபோன்ற பானங்களில் அதிக கலோரிகள் மற்றும் அதிக இனிப்பு இருக்கிறது.
நமது சர்ககரை அளவை அதிகரிக்கும்
இதுபோன்ற இனிப்பான பானங்கள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். மேலும் இன்சுலினை நமது உடல் ஏற்றுக்கொள்ளாதவாறு மாற்றிவிடும். இந்நிலையில் அதிக பிரக்டோஸ் (fructose) எடுத்துக்கொள்வதால், இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்படும். இதனால் டைப் 2 சர்ககரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
கூடுதலான பிரக்டோஸ் அளவு, கொழுப்பாக மாறும் வாய்ப்புகளும் உள்ளது. கூடுதாக இது உடல் எடையை அதிகரிக்கும்.
இதய நோய்
அதிக சர்க்கரை சேர்த்த பானங்களை குடிப்பதால், இதய நோய் ஏற்படும் வாய்புகள் அதிகம். அதிக பிரக்டோஸ் அளவு, ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை அதிகரிக்கும். இதனால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இதற்கு தீர்வு என்ன ?
இந்நிலையில் நீங்கள் பழச்சாறுகளை குடிக்க வேண்டும் என்று நினைத்தால், அதில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும்.
இதுபோல எலுமிச்சை சாறு, இளநீர், மோர், சர்பத், லசி ஆகியவற்றை நாம் குடிக்கலாம்.