ஸ்டஃப்டு கத்தரிக்காய்: புதுசா, சுவையா இப்படி செய்து பாருங்க!

ஸ்டஃப்டு கத்தரிக்காய் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

ஸ்டஃப்டு கத்தரிக்காய் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Brinjal

Food

செட்டிநாடு ஸ்டைல் ஸ்டஃப்டு கத்தரிக்காய் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

மசாலா தூள் அரைக்க

தனியா - 4 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 4 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு - 4 பற்கள்
நீளவாக்கில் நறுக்கியது எள்ளு - 2 டீஸ்பூன்
கொப்பரை தேங்காய் துருவியது - அரை கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்

ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்ய

Advertisment
Advertisements

கத்திரிக்காய் - 1 கிலோ
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
அரைத்த மசாலா பொடி - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

ஸ்டஃப்டு கத்தரிக்காய்

கத்திரிக்காய் - 1 கிலோ
மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
அரைத்த மசாலா பொடி - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

கத்திரிக்காயை நன்றாக கழுவி நீளவாக்கில் 4 பாகமாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தனியா, சீரகம், கடலை பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும்.

மசாலா பொன்னிறமாக மாறியதும் அதில் நீளவாக்கில் நறுக்கிய பூண்டு மற்றும் எள்ளு சேர்த்து வறுக்கவும். பிறகு கொப்பரை தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து, நன்கு ஆற வைத்து ஆறியதும் தூளாக அரைத்து கொள்ளவும். உப்பு, மிளகாய் துள், அரைத்த மசாலா தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை கத்திரிக்காயில் உள்ளே வைத்து மூடவும். இவ்வாறு அனைத்து கத்திக்காயிலும் செய்யவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பிறகு கத்தரிக்காவை போட்டு வதக்கவும். அடுத்து ஒரு சிட்டிகை உப்பு மற்றும் அரைத்த மசாலாவை சேர்த்து கடாயை மூடி 5 நிமிடம் வேகவிடவும். கத்தரிக்காயை திருப்பி விட்டு மூடி 5 நிமிடம் வேகவிடவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து இறக்கினால் அவ்வளவு தான் செட்டிநாடு ஸ்டைல் ஸ்டஃப்டு கத்தரிக்காய் தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: