ஈவ்னிங் ஸ்நாக்ஸ்: முட்டை மறைச்சு வச்ச போண்டா... பிள்ளைங்க தேடி தேடி சாப்பிடுவாங்க

சம்மர் ஸ்பெஷலாக முட்டை மறைச்சு வச்ச முட்டை போண்டா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

சம்மர் ஸ்பெஷலாக முட்டை மறைச்சு வச்ச முட்டை போண்டா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
முட்டை போண்டா

சம்மர் ஸ்பெஷலாக பிள்ளைகளுக்கு உணவு மீது ஆர்வத்தை தூண்டும் விதமாக மறைச்சு வச்ச முட்டை போண்டா எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த முட்டை போண்டா எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

முட்டை - 4 
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 2 
உப்பு - 1/4 தேக்கரண்டி
மிளகு
முட்டை மஞ்சள் கரு
கொத்துமல்லி தழை
கடலை மாவு  - 3/4 கப்
அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
ஓமம் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் 

செய்முறை 

Advertisment
Advertisements

முதலில் முட்டையை சுடு தண்ணீரில் வேக வைக்கவும். வெந்த முட்டையின் ஓடுகளை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டி வைத்து மஞ்சள் கருவையும் வெள்ளை கருவையும் தனி தனியாக எடுத்து வைக்கவும் 

அடுத்து முட்டையின் வெள்ளை கருவை நிரப்ப ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, மிளகு தூள், முட்டையின் வேகவைத்த மஞ்சள் கரு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறவும். 

தயாரான கலவையை முட்டையின் வெள்ளை கருவில் சேர்த்து வைக்கவும். அடுத்து முட்டை போண்டாவிற்கு மாவு தயாரிக்க வேண்டும். அதற்க்கு ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், ஓமம், தண்ணீர் சேர்த்து மாவாக கரைக்கவும். 

தயார் செய்து வைத்த மாவில் முட்டையை நனைத்து சூடான பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். பொறித்து எடுத்தால் அவ்வளவு தான் சூடான மற்றும் சுவையான முட்டை போண்டா தயார். 

Egg Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: