கோவக்காய் நீரிழிவு போன்ற சர்க்கரை நோய்களைத் தடுப்பது, உடல் எடையை குறைக்க, இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கும் சிறந்தது. அதிக இரும்பு சத்து உள்ளது. எனவே உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தும். மலச்சிக்கல், புண்கள் மற்றும் நோய்கள் போன்ற பிற இரைப்பை குடல் கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது.
இப்படி பல நன்மைகளை கொண்ட கோவக்காயை சுத்தம் செய்து வேகவைத்து சப்பிடலாம். அதை கொஞ்சம் சுவையுடன் எப்படி சமைப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோவக்காய்
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கருவேப்பிலை
மிளகாய்த்தூள்
கரம் மசாலாத்தூள்
மஞ்சள் தூள்
கொத்தமல்லித்தூள்
தேங்காய்
நிலக்கடலை
செய்முறை
கோவைக்காயை கழுவி வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். சில பழங்கள் பழுத்ததாகவும் காயாகவும் இருக்கும் அவை தூக்கி போட வேண்டாம் அனைத்தையும் நறுக்கி சமைக்க ஆரம்பிக்கலாம். ஒரு கடாயில் எண்ணெய் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித்தூள் இவை அனைத்தையும் சேர்த்து எண்ணெயில் வதக்கி விடவும்.
பின்னர் இதில் நறுக்கி வைத்துள்ள கோவக்காயையும் சேர்த்து வதக்க வேண்டும். இது வேக வைக்கும் போது தேவையான அளவு உப்பை சேர்த்து கலந்து வேக விடவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
கோவக்காய் இந்த மாதிரி சமைத்தால் பல நோய்களை தடுக்கலாம் | HOW TO FRY SCARLET GOURDS | DrSJ
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும் கோவக்காய் நன்கு வெந்ததும் அதில் இந்த தேங்காயையும் நிலக்கடலை அரைத்ததையும் சேர்த்து கலந்து விடவும். தேங்காய் சேர்ப்பதன் மூலம் சுவையை கூட்டிக் கொடுக்கும்.
இதனை சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். கோவக்காய் பொரியல் செய்து விட்டு அதில் சாதத்தை கிளறி கொடுக்கலாம். கோவைக்காயை வாரத்தில் இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம் சர்க்கரை நோயாளிகள் மூன்று நாட்களும் சேர்த்து சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“