கிடுகிடுவென சுகர் ஏறுதா? சாப்பிடும் நேர அளவு இப்படி இருக்கட்டும்: டாக்டர் சிவபிரகாஷ்
சாப்பிட்ட பிறகு, அவர்களின் ரத்தத்தின் சர்க்கரை அளவு கிடுகிடுவென அதிகரிப்பதாகக் கூறுகிறார்கள். அதனால், சாப்பிட்ட பிறகு இப்படி வேகமாக உயரும் சர்க்கரையைக் கட்டுப்படுத்த டாக்டர் சிவபிரகாஷ், சாப்பிடும் நேரம், உணவுப் பொருள்கள் குறித்து சில வழிமுறைகளைக் கூறுகிறார்.
சாப்பிட்ட பிறகு, அவர்களின் ரத்தத்தின் சர்க்கரை அளவு கிடுகிடுவென அதிகரிப்பதாகக் கூறுகிறார்கள். அதனால், சாப்பிட்ட பிறகு இப்படி வேகமாக உயரும் சர்க்கரையைக் கட்டுப்படுத்த டாக்டர் சிவபிரகாஷ், சாப்பிடும் நேரம், உணவுப் பொருள்கள் குறித்து சில வழிமுறைகளைக் கூறுகிறார்.
வேகமாக உயரும் சர்க்கரையைக் கட்டுப்படுத்த டாக்டர் சிவபிரகாஷ், சாப்பிடும் நேரம், உணவுப் பொருள்கள் குறித்து சில வழிமுறைகளைக் கூறுகிறார்.
சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டெ வருகிறது. சர்க்கரை நோய் இல்லாதவர்களும்கூட தங்களுக்கு சர்க்கரை நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். பொதுவாக, சர்க்கரை நோய் உள்ளவர்களும் சரி, சர்க்கரை நோய் இல்லாதவர்களும் சரி, சாப்பிட்ட பிறகு, அவர்களின் ரத்தத்தின் சர்க்கரை அளவு கிடுகிடுவென அதிகரிப்பதாகக் கூறுகிறார்கள். அதனால், சாப்பிட்ட பிறகு இப்படி வேகமாக உயரும் சர்க்கரையைக் கட்டுப்படுத்த டாக்டர் சிவபிரகாஷ், சாப்பிடும் நேரம், உணவுப் பொருள்கள் குறித்து சில வழிமுறைகளைக் கூறுகிறார்.
Advertisment
சாப்பிட்ட பிறகு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் மிக வேகமாக உயர்வதை postprandial Hyperglycemia என்று கூறுகிறார்கள்.
இதற்கு காரணம், நாம் உண்ணும் உணவு வேகமாக வயிற்றில் காலியாகும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்துகிறது. அதே போல, வேகமாக சாப்பிடும்போது, வேகமாக வயிறு நிரம்பி, வேகமாக வயிறு காலியாகும்போது, சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனால்தான், சாப்பிட்ட பிறகு, சோர்வு அல்லது தூக்கம் வருவதற்கு இந்த postprandial Hyperglycemia காரணமாக இருக்கிறது என்று டாக்டர் சிவபிரகாஷ் கூறுகிறார்.
Advertisment
Advertisements
இப்படி சாப்பிட்ட பிறகு, கிடுகிடுவென வேகமாக சர்க்கரை உயர்வதைத் தடுக்க நீங்கள் வேகவேகமாக சாப்பிடுவதைக் கட்டுபடுத்த வேண்டும். 5 நிமிடத்தில் சாப்பிடுவதை 20 நிமிடங்கள் என்று மெதுவாக சாப்பிடுங்கள்.
பாலிஷ் செய்த அரிசி, இட்லி போன்ற மாவுச் சத்துப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். அதே போல, ஆதானியங்களை மாற்ற வேண்டும். பாலிஷ் செய்யப்படாத அரிசி மற்றும் யானைக் கவுனி, மாப்பிள்ளை சம்பா, சிறுதானியங்கள் ஆகியவற்றை பாலிஷ் செய்யாமல் சாதமாக வடித்து சாப்பிட வேண்டும். மாவாக அரைத்து இட்லி, தோசையாக செய்து சாப்பிடக் கூடாது. பாலிஷ் செய்யாமல் சாதமாக மட்டுமே சாப்பிடும்போது குறைவாக சாப்பிடமுடியும், வேகமாக சாப்பிட முடியாது. இதனால், சாப்பிட்ட பிறகு, வேகவேகமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது குறையும். மேலும், நார்ச்சத்து உள்ள காய்கறிகள் மற்றும் தானியங்களை சாப்பிட வேண்டும். மாவுச்சத்து உள்ள பொருட்களை சாப்பிடுவதற்கு முன், புரதச்சத்து உணவுகளை சாப்பிட வேண்டும். அசைவம் சாப்பிடுபவர்கள், முதலில் மாமிசத்தை சாப்பிட்ட பிறகு, அதன் பிறகு இந்த மாவுச்சத்து உணவுகளை சாப்பிடலாம் என்று டாக்டர் சிவபிரகாஷ் கூறுகிறார்.
சாப்பிட்ட பிறகு, இப்படி ரத்தத்தில் கிடுகிடுவென சர்க்கரை அளவு உயர்வதும், ஒரு மணி நேரத்தில் வேகமாகக் குறைவதும் நல்லதல்ல, இதனால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர் சிவப்பிரகாஷ் கூறுகிறார். அதனால், உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதோ, இல்லையோ, அல்லது, சர்க்கரை நோயில் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறீர்கள் என்றால், உணவை சாப்பிடும் நேரம், உணவு முறை, உணவின் தரம் ஆகியவற்றை மாற்றிக்கொள்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“