சர்க்கரை நோய் வந்துவிட்டால், எந்த பழங்களையும் சாப்பிட முடியவில்லை என்று கவலைப்படுகிறீர்களா, பப்பாளி பழத்தை குறைந்த அளவில் சாப்பிடலாம் என்று டாக்டர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
டாக்டர் சிவராமன் நமது பாரம்பரிய மற்றும் இயற்கையான உணவில் உள்ள ஆரோக்கிய நன்மைகளையும் அதன் மருத்துவ குணங்களையும் பற்றி பேசி விழிப்புணர்வை ஏறடுத்தி வருகிறார். இவர் பப்பாளி பழத்தின் நன்மை பற்றி பேசியுள்ளார்.
நல்ல சுவை மிக்கதாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் அதே நேரத்தில் ஊட்ட உணவாகவும் ஒரு பழம் உள்ளது என்றால், அது பப்பாளி பழம்தான். பப்பாளி பழம் கண் பார்வைக்கு நல்லது, கண்ணை பாதுகாக்க முதலிடம் கொடுக்க வேண்டும். கண்ணைப் பாதுகாக்க பப்பாளி தான் உங்களுடைய முதல் தேர்வா இருக்க வேண்டும். அந்த அளவுக்கு கண்களுக்கு விட்டமின் ஏ சத்து நிறைய கொடுத்து கண்களை பாதுகாப்பாக வைப்பதில் பப்பாளி பழம் முதலிடத்தில் உள்ளது என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
எந்த சத்தான பழங்களையும் சாப்பிட முடியவில்லையே என்று ஏங்குகிற சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் பப்பாளி பழம் சாப்பிடலாம் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். “சர்க்கரை நோயாளிகளால், பல பழங்கள் சாப்பிட முடியாது. மாம்பழம் சாப்பிடக் கூடாது, சப்போட்டா சாப்பிடக் கூடாது. கட்டுப்பாடு இல்லை என்றால் வாழைப்பழம்கூட சாப்பிடக் கூடாது. நல்ல இனிப்பு சுவையுள்ள பப பழங்களை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். ஆனால் பப்பாளி பழத்தை குறைந்த அளவுல சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் சாப்பிடலாம். ஏனென்றால், எந்த பழமும் சாப்பிடவில்லை என்றால் சர்க்கரை நோயாளிக்கு ஒரு சோர்வு எப்போதும் இருந்துகொண்டிருக்கும். ஏற்கெனவே, நிறைய உணவுக் கட்டுப்பாடு, நிறைய மருந்துகள், சில நேரத்தில் இன்சுலின் போட்டுக்கொண்டு, சத்தான பழங்கள் சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கம் பல சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டு. அந்த ஏக்கத்தை போக்கக்கூடியது பப்பாளிப்பழம். பப்பாளிப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவுல தினசரி அவர்கள் உணவோடு சேர்த்து சாப்பிட்டால் நல்ல ஒரு எனர்ஜி கிடைக்கும். உடலில் ஆற்றல் கிடைக்கும், நரம்பு தளர்ச்சி வராது.” என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“