இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்த நோய் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த உணவு முறையில் மாற்றம் செய்ய வேண்டியது கட்டாயம்.
தவறான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை அல்லது அதிகப்படியான மன அழுத்தம் ஆகியவை உடலில் உள்ள கார்டிசோலின் அளவைப் பாதிக்கிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை உருவாக்குகிறது, உயர் இரத்த சர்க்கரை உடலை பாதிப்படையச் செய்கிறது மற்றும் முக்கிய உறுப்புகளை செயல் இழக்க வைக்கும்.
உடல் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்பை நிர்வகிக்கவும் இயற்கை மூலிகைகள் பெரிதும் உதவுகிறது. அந்த வகயைில் காலையில் எழுந்தவுடன் சில இயற்கை மூலிகைகளை சாப்பிடும்போது சர்க்கரை நோயின் அளவு வெகுவாக கட்டுப்படும்.
புரதம், நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் குறைந்த கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுடன், இந்த மூலிகைகளை நீங்கள் இணைத்தால் மட்டுமே இந்த மூலிகைகள் வேலை செய்யும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை பெரும்பாலான இந்திய வீடுகளில் காணப்படுகிறது, இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவது உணவில் இருந்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். மேலும் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது. கறிவேப்பிலையில் உள்ள நார்ச்சத்து நீண்ட காலத்திற்கு செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
குடுச்சி/கிலோய்
பொதுவாக இந்தியாவில் காணப்படும் இந்த மூலிகையை சாறு அல்லது தேநீர் வடிவில் காலையில் உட்கொள்ளலாம். உண்மையில், சில இலைகளை கழுவி மென்று சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே இன்சுலின் உணர்திறனை நிர்வகிக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கல்லீரல் மற்றும் மண்ணீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். மேலும், இந்த மூலிகை ஒவ்வாமையை எதிர்த்துப் போராட உதவுகிறது.
வேம்பு
பொதுவாக இந்த மூலிகை இன்சுலின் உணர்திறனை நிர்வகிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், வேம்பு போன்ற மூலிகைகள் கசப்பான சுவையுடையவை, எனவே தேநீர் வடிவில் அல்லது நச்சுநீரில் சேர்ப்பதன் மூலம் உட்கொள்ளலாம்.
அஸ்வகந்தா
ஆயுர்வேதத்தின் மற்றொரு ரத்தினம் அஸ்வகந்தா, இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, மூளையின் செயல்பாட்டிற்கு சிறந்தது, மன அழுத்தம், சோர்வு மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இந்த மூலிகையை தேநீர் வடிவில் அல்லது பாலுடன் கலந்து குடிப்பதன் மூலம் அதன் செயல்திறனை அதிகரிக்க முடியும். இது தூக்கத்தைத் தூண்டுவதன் மூலம் ஒரு சிறந்த படுக்க செல்லும் முன் இந்த இதைபாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மூலிகைகள் உயர் இரத்த சர்க்கரையை நிர்வகிக்கும் மற்றும் காய்ச்சல், சளி போன்ற பருவ மாற்றத்தின் போது உடலை பாதிக்கும் பல நோய்களை நிர்வகிக்கின்றன. இருமல் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட பல நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“