சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக கார்போஹைட்ரேட்ஸ் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. அதிக அளவு கார்போ ஹைட்ரேட் தரும் அரிசி சோறு அதிகம் சாப்பிடக் கூடாத நிலையில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் 3 வேளையும் சோறு சாப்பிட வேண்டும் என்ற பெரும் விருப்பத்துடன் உள்ளனர்.
இப்படி, 3 வேளையும் சோறு சாப்பிட வேண்டும் என்று விருப்பப்படும் சர்க்கரை நோயாளிகள், தினமும் 250 கிராம் இந்த காய்கறிகளை சாப்பிடுங்கள் என்று மருத்துவர் ஒருவர் பரிந்துரைக்கிறார். சுகர் பேஷண்ட்ஸ் இதை நோட் பண்ணுங்க.
சர்க்கரை நோயாளிகள் தங்களுக்கு 3 வேளையும் சோறுதான் பிடித்திருக்கிறது என்றால், பரவாயில்லை. ஆனால், சோறை பாத்திகட்டி நிறைய சாப்பிடாமல், கொஞ்சமாக சோறு சாப்பிட்டும்கூட சர்க்கரையைக் கட்டுப்படுத்தலாம். அடுத்து அதிக நார்ச்சத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நிறைய காய்கறிகளை சாப்பிட வேண்டும். குறைந்தபட்சம், 250 கிராம் காய்கறிகளை சாப்பிட வேண்டும். நிலத்திற்கு மேலே விளைகிற காய்கறிகளை சாப்பிடலாம். இதில் சில விதி விலக்குகளும் உள்ளன.
அதே நேரத்தில். தவிர்க்கப்பட வேண்டிய காய்கறிகளும் உள்ளன. நிலத்திற்கு கீழே விளையக்கூடிய கிழங்குகளைத் தவிர்க்க வேண்டும். நிலத்திற்கு கீழே விளையக்கூடிய பீட்ரூட் போன்றவற்றில் சுகர், கார்போ ஹைட்ரேட் அதிகம். அதனால், இவற்றைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள், நிலத்திற்கு கீழே விளையக்கூடிய கிழங்குகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் அளவாக கொஞ்சமாக சோறு சாப்பிட்டு, ஒரு நாளைக்கு 250 கிராம் காய்கறிகள் எடுத்துக்கொண்டால் சர்க்கரையைக் கட்டுப்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“