தேவையான பொருட்கள் :
மல்லி - 50 கிராம்
சுக்கு - 50 கிராம்
சித்தரத்தை - 25 கிராம்
மிளகு/வால்மிளகு - 5 கிராம்
திப்பிலி - 5 கிராம்
அதிமதுரம் - 1
ஏலக்காய் - 3 to 4
செய்முறை :
முதலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை தனித்தனியாக வறுத்து எடுத்து ஆறவைக்கவும். அவை அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அறைத்து எடுத்தால் சுக்கு மல்லிப்பொடி தயார். இதை காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளலாம். தேவைற்கேற்ப அனைத்து பொருட்களையும் சேர்த்து அறைத்துக்கொள்ளலாம்.
சுக்கு மல்லி காபி பொடி செய்முறை/ Dry ginger coriander coffee/ sikku coffee in Tamil
இந்த சுக்குமல்லி பொடியை மூன்று வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்தலாம். பால் அல்லது கொதிக்கவைத்த தண்ணீரில் நாட்டுச்சக்கரையுடன் கலந்து குடிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“