வாய், வயிற்றுப் புண்ணை ஓட விடும் இந்தக் குழம்பு... பொள்ளாச்சி பக்கம் ரொம்ப பேமஸ்: செஃப் தீனா ரெசிபி
வாய், வயிற்றுப் புண்ணை ஓட விடும் இந்தக் குழம்பு பொள்ளாச்சி பக்கம் ரொம்ப பேமஸ் ஆன ஒன்று. மருத்துவ குணமுள்ள சுக்குடிக்காய் குழம்பு எப்படி செய்வது என்று செஃப் தீனா செய்முறை வீடியோ வெளியிட்டுள்ளார்.
வாய், வயிற்றுப் புண்ணை ஓட விடும் இந்தக் குழம்பு பொள்ளாச்சி பக்கம் ரொம்ப பேமஸ் ஆன ஒன்று. மருத்துவ குணமுள்ள சுக்குடிக்காய் குழம்பு எப்படி செய்வது என்று செஃப் தீனா செய்முறை வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் தீனா தனது யூடியூப் சேனலில், பொள்ளாச்சி பக்கம் ரொம்ப பேமஸ் ஆன சுக்குடிக்காய் குழம்பு என்கிற வாய், வயிற்றுப் புண்ணை ஓட விடும் மருத்துவக் குணமுள்ள குழம்பை பொள்ளாச்சியில் சுந்தர் தோப்புக்கடை உரிமையாளரை வைத்து செஃப் தீனா செய்து காட்டியுள்ளார்.
வாய், வயிற்றுப் புண்ணை ஓட விடும் இந்தக் குழம்பு பொள்ளாச்சி பக்கம் ரொம்ப பேமஸ் ஆன ஒன்று. மருத்துவ குணமுள்ள சுக்குடிக்காய் குழம்பு எப்படி செய்வது என்று செஃப் தீனா செய்முறை வீடியோ வெளியிட்டுள்ளார்.
Advertisment
பிரபல சமையல் கலைஞர் தீனா தனது யூடியூப் சேனலில், பொள்ளாச்சி பக்கம் ரொம்ப பேமஸ் ஆன சுக்குடிக்காய் குழம்பு என்கிற வாய், வயிற்றுப் புண்ணை ஓட விடும் மருத்துவக் குணமுள்ள குழம்பு பொள்ளாச்சியில் சுந்தர் தோப்புக்கடை உரிமையாளரை வைத்து செஃப் தீனா செய்து காட்டியுள்ளார்.
அது என்ன சுக்குடிக்காய் என்று நீங்கள் கேட்கலாம். அது வேறு ஒன்றுமில்லை. மணத்தக்காளி கீரையில் உள்ள மணத்தக்காளி காய் எடுத்து செய்யப்படும் குழம்புதான் சுக்குடிக்காய் குழம்பு. பொள்ளாச்சி பகுதியி மணத்தக்காளி கீரையை சுக்குடி கீரை என்று சொல்கிறார்கள். இதில் இருந்து காய்க்கும் காயை எடுத்து செய்வதால், சுக்குடிக்காய் குழம்பு என்கிறார்கள். இது வாய், வயிற்றுப் புண்ணை சரி செய்யும்.
Advertisment
Advertisements
சுக்குடிக்காய் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்:
சுக்குடிக்காய் (மணத்தக்காளி காய்) - 150 கிராம் சின்னவெங்காயம் - 150 கிராம் தேங்காய் அரை மூடி துருவியது காய்ந்த மிளகாய் 7 சீரகம் 1 டீஸ்பூன் மிளகு 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதை 2 டேபிள்ஸ்பூன் கருவேப்பிலை தேவையான அளவு புளி ஒரு நெல்லிக்காய் அளவு ஊறவைத்த புளி கரைசல் வெல்லம் 2 சிறிய துண்டுகள் கடலை எண்ணெய் 150 மி.லி கடுகு சிறிதளவு உப்பு தேவையான அளவு
சுக்குடிக்காய் குழம்பு செய்முறை:
ஸ்டவ்வை பற்றவைத்து ஒரு பெரிய கடாயை வையுங்கள். அதில் கடலை எண்ணெய்யை ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு, சின்ன வெங்காயத்தைப் போடுங்கள். வர மல்லி விதைகள் போடுங்கள், சீரகம் போடுங்கள், மிளகு போடுங்கள், வர மிளகாய் கிள்ளி போடுங்கள், கருவேப்பிலை போடுங்கள். நன்றாக பொன்னிறமாக வதக்குங்கள். துருவிய தேங்காயைப் போடுங்கள். லைட்டா வதக்குங்கள். இதை எடுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது தாளிப்பு போட வேண்டும். கடாயில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கொஞ்சம் கடுகு போடுங்கள். கருவேப்பிலை போடுங்கள், மணத்தக்காளி காய்களைப் போடுங்கள். வதக்கிய பிறகு, அரைத்து வைத்த மசாலாவை போடுங்கள். நன்றாகக் கலக்கி விடுங்கள், தேவையான அளவு உப்பு போடுங்கள். நன்றாகக் கொதித்ததும், வெல்லம் 2 சிறிய துண்டு போடுங்கள். நன்றாகக் கலக்கிவிடுங்கள். அவ்வளவுதான் சுக்குடிக்காய் குழம்பு தயார். இட்லி தோசை, சோறு என எல்லாவற்றுக்கும் இந்த சுக்குடிக்காய் குழம்பு நல்லா இருக்கும். உங்கள் வீட்டில் செய்து சூடாக சாப்பிட்டுப் பாருங்கள்.