கேழ்வரகு உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரோக்கிய உணவு. இதோடு காய்கறிகள் சேர்த்து சம்மருக்கு இதமான சூப் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 3 ஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
கேரட் - 1
பசலை கீரை - அரை கப்
பச்சை பட்டாணி - கால் கப்
காலிஃப்ளவர் - சிறிதளவு
துருவிய கோஸ் - கால் கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
சோயா பீன்ஸ் - கால் கப்
பீன்ஸ் - கால் கப்
எலுமிச்சை பழம் - பாதி
உப்பு - தேவைக்கு
மிளகு தூள் - தேவைக்கு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
நெய் - 1 ஸ்பூன்
செய்முறை
பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, கொத்தமல்லி உள்ளிட்ட பொருட்களை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து வைக்கவும். அடுத்து கடாய்யில் நெய் ஊற்றி சூடானதும் கேழ்வரகு மாவை போட்டு வறுத்து கொள்ளவும். கேழ்வரகு மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் 4 கப் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நெய், பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, காலிஃப்ளவர், சோயா பீன்ஸ், துருவிய கோஸ், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வேக வைக்கவும். அடுத்து அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து கொதிக்கவிடவும்.
கரைத்த வைத்த கேழ்வரகு கரைசலை ஊற்றி கட்டி விழுகாமல் நன்றாக கலக்கி விடவும். அடுத்து அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து 1 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும். அவ்வளவு தான் சுவையான ஆரோக்கியமான கேழ்வரகு - காய்கறி சூப் தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil