கோடை விடுமுறை தொடங்கியாச்சு அப்போ வீட்டில் இருக்கும் பிள்ளைகள் சாப்பிடுவதற்கு ஸ்நாக்ஸ் செய்ய வேண்டியது அவசியம். அப்படியென்றால் வீட்டில் இருக்கும் வாழைப்பழத்தை வைத்து இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்கள். ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது போன்று பழம் பொரி செய்வது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1 கப் (250 மி.லி கப்) அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி உப்பு - 1 சிட்டிகை ஏலக்காய் தூள் மஞ்சள் தூள் வெல்லம் - 1 மேசைக்கரண்டி தண்ணீர் சோடா உப்பு - 1 சிட்டிகை நேந்திரம் பழம் - 4 எண்ணெய்
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு கப்பில் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, ஏலக்காய் தூள், மஞ்சள் தூள், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் இதில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மாவு கரைத்துக் கொள்ள வேண்டும்.
தோசை மாவு பதத்திற்கு இதை விஸ்க் வைத்து கரைத்துக் கொள்ளவும். இதில் ஒரு சிட்டிகை சோடா உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர் நேந்திரம் பழத்தை எடுத்து தோல் உரித்தி நறுக்கிக் கொள்ளவும். இந்தப் நறுக்கிய பலத்தை எடுத்து மாவில் நனைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
இரண்டு பக்கமும் சிவந்து வரும் வரை வேக விட்டு எடுத்து ஈவ்னிங் டீ ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்.