சம்மர் ஸ்பெஷலாக பிள்ளைகளுக்கு ஸ்நாக்ஸ் மாதிரியும் சாப்பாட்டுக்கு சைட் டிஷ் மாதிரியும் மொறுமொறுப்பான அரிசி வடகம் எப்படி சுவையாக செய்வது என்று பார்ப்போம். இந்தியன் ரெசிப்பீஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் சுவையான அரிசி வடகம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
2 கப் தண்ணீர் உப்பு 1 கப் அரிசி மாவு
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும், 1 கப் அரிசி மாவு சேர்த்து, மிதமான தீயில் நன்கு கலந்து, மாவு கெட்டியாகும் வரை சமைக்கவும்.
அடுப்பை அணைத்து, பாத்திரத்தை மூடி, மாவை 30 நிமிடங்கள் ஆற விடவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு, மூடியைத் திறந்து, ஒரு ஸ்பூன் அல்லது உங்கள் கையால் மாவை நன்கு பிசைந்து மென்மையாக்கிக் கொள்ளவும்.
பின்னர் மாவின் ஒரு பகுதியை எடுத்து இடியாப்ப அச்சில் (சிறிய துளைகள் கொண்ட பிரஸ்) போட்டு மாவை ஒரு தாள் அல்லது துணியில் சிறிய நூடுல்ஸ் போன்ற வடிவங்களில் பிழியவும். வட்டமாகவோ அல்லது சிதறியோ தேவையான வடிவில் பிழியலாம்.
வடகத்தை 4 நாட்கள் வெயிலில் உலர்த்தவும். வடகம் வெயிலில் நன்கு காய்ந்து மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். அப்போது தான் இது சமைக்க தயாராக இருக்கும். எண்ணெயை அதிக தீயில் சூடாக்கி, உலர்ந்த வடகத்தைப் பொன்னிறமாக மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
இதை சும்மா ஸ்நாக்ஸ் மாதிரியும் சாப்பிடலாம். சாதத்தோடு சேர்த்தும் சாப்பிடலாம்.