வீட்ல முட்டை இருக்கா... அப்போ இந்த ஸ்நாக்ஸ் செய்யுங்க

வீட்டில் முட்டை இருக்கா என்ன செய்வது என்று தெரியவில்லையா அப்போ இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பன்னுங்கள்.

வீட்டில் முட்டை இருக்கா என்ன செய்வது என்று தெரியவில்லையா அப்போ இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பன்னுங்கள்.

author-image
WebDesk
New Update
egg 65

கோடை ஸ்பெஷலாக வீட்டில் இருக்கு பிள்ளைகளுக்கு செய்து கொடுக்க வேண்டிய முக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை பற்றி பார்ப்போம். முட்டையை வைத்து சிக்கன் ஸ்டைலில் முட்டை 65 செய்வது பற்றி ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

வேகவைத்த முட்டை 
இஞ்சி  
பூண்டு 
பச்சை மிளகாய் 
வெங்காயம் 
கறிவேப்பிலை  
கொத்தமல்லி இலை  
உப்பு  
மிளகாய் தூள்  
மஞ்சள் தூள் 
மிளகு தூள்  
சீரக தூள் 
கரம் மசாலா தூள் 
கடலை மாவு  
எண்ணெய்  
தக்காளி கெட்சப்  

செய்முறை:

Advertisment
Advertisements

முதலில் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கவும். பிறகு நறுக்கிய முட்டையை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

பின்பு அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள்,சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும். பிறகு கடலைமாவு சேர்த்து கலந்துவிடவும், பின்பு தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் முட்டை மசாலா கலவையை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் சிறிதளவு வதங்கும் வரை வதக்கவும். பிறகு மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவும், பின்பு பொரித்த முட்டையை சேர்த்து கலந்துவிடவும்.

கடைசியாக தக்காளி கெட்சப் சேர்த்து கலந்து இறக்கவும். முட்டை 65 தயாராகிவிடும்.

Egg

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: