வெயில் சூடு தாங்க முடியலையா அப்போ குளுகுளுன்னு இருக்க வீட்டிலேயே ப்ரூட் மிக்ஸர் எப்படி செய்வது என்று ஹோம் குகிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
ஒரு மிக்ஸியில் முழு கொழுப்புள்ள பால், ரோஸ் சிரப் மற்றும் ஐஸ் கட்டியை சேர்த்து நன்றாக கலக்கவும். மேலும் ரோஸ் சிரப் மற்றும் சர்க்கரை சேர்த்து மீண்டும் கலக்கவும். ஒரு கிளாஸில் ஐஸ் கட்டிகளை போட்டு ரோஸ் மில்க்கை ஊற்றினா ரோஸ் மில்க் பரிமாற தயாராகி விடும்.
Advertisment
Advertisements
பின்னர் ப்ரூட் மிக்ஸர் செய்ய ஒரு பெரிய கிண்ணத்தில் வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, பைனாப்பிள், ஆப்பிள், மாதுளையை சேர்த்து மசிக்கவும். அடுத்து அதில் திராட்சை, ரோஸ் சிரப் சேர்த்து மீண்டும் மசிக்கவும். ஒரு கிளாஸில் பாதியளவு பாதாம் பாலை ஊற்றி, ப்ரூட் மிக்ஸரை சேர்த்தால் ப்ரூட் மிக்ஸர் பரிமாற தயாராக உள்ளது.