சம்மர் ஸ்பெஷல்... வெயிலை தணிக்க தயிர் சாதம்; கோயில் ஸ்டைலில் இப்படி செய்யுங்கள்
சம்மர் வந்தாச்சு இனி யாருக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்க போகிறோம் என்று நினைக்கிறீர்களா? அப்படி மட்டும் யோசிக்காதீங்க. வேலைக்கு செல்பவர்களுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு வெயிலை தணிக்கும் தயிர் சாதம் செய்து கொடுங்கள்.
சம்மர் வந்தாச்சு இனி யாருக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்க போகிறோம் என்று நினைக்கிறீர்களா? அப்படி மட்டும் யோசிக்காதீங்க. வேலைக்கு செல்பவர்களுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு வெயிலை தணிக்கும் தயிர் சாதம் செய்து கொடுங்கள்.
சம்மர் ஸ்டார்ட் ஆகிடுச்சு. இந்த சம்மர் ஸ்பெஷலாக வெயிலை தணிக்க கோயில் ஸ்டைலில் தயிர் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். சுவையான குழைந்த தயிர்சாதம் எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
தயிர் - 1 கப் சாதம் - 1/2 கப் உப்பு - 1 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 3 இஞ்சி - 1 துண்டு கறிவேப்பிலை பொடித்த மிளகு - 1/2 தேக்கரண்டி பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி இலை
செய்முறை:
Advertisment
Advertisements
தயிரை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து சாதத்தை மசித்து கொள்ளவும். பின்பு மசித்த சாதத்துடன் அடித்த தயிரை சேர்த்து கலந்து விடவும்.
தாளிக்க ஒரு பானில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பொடித்த மிளகு, பெருங்காய தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து தயிர் கலந்த சாதத்துடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்தால் போதும் சுவையான கோயில் ஸ்டைல் தயிர் சாதம் தயார்.