சீசன் ஸ்பெஷல்... வீட்ல மாம்பழம் இருக்கா; அப்போ 2 பொருள் போதும் இதை ட்ரை பண்ணுங்க

சம்மர் ஸ்பெஷல் மாம்பழம் வைத்து மாம்பழம் ஃப்ரூட்டி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

சம்மர் ஸ்பெஷல் மாம்பழம் வைத்து மாம்பழம் ஃப்ரூட்டி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
mango frooti

சம்மர் ஸ்பெஷல் மாம்பழம் வைத்து சுவையாம மாம்பழம் ஃப்ரூட்டி எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

அல்போன்சா மாம்பழம் - 1 பெரிய கிண்ணம் (3)
மாங்காய் - 1 கப்
சர்க்கரை - 1 கப் (250 மி.லி)  
தண்ணீர் - 1 லிட்டர்

செய்முறை:

Advertisment
Advertisements

மாம்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மாங்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாம்பழம், மாங்காய், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும். பின்பு வடிகட்டி நன்கு ஆறவிடவும். பிறகு வேகவைத்த மாம்பழத்தை விழுதாக அரைத்து கொள்ளவும்.

பின்பு மாம்பழம் வேகவைத்த தண்ணீரில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து கலந்துவிடவும். பிறகு மறுபடியும் கலந்த வைத்த மாம்பழ கலவையை வடிகட்டி, பின்பு பரிமாறவும். அருமையான மாம்பழ ப்ரூட்டி தயார். 

Benefits of drinking mango juice during summer

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: