வெயிலுக்கு இதமா சில்லுன்னு குடிக்கிற மாதிரி பால்கோவா ரோஸ் மில்க் வீட்டிலேயே எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
முழுகொழுப்புள்ள பால் – 1 1/4 லிட்டர் பால்கோவா – 200 கிராம் ரோஸ் சிரப் ஏலக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி குங்குமப்பூ ஐஸ் கட்டிகள்
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, தேவையான அளவு ரோஸ் சிரப் சேர்த்து, தனியாக வைக்கவும். மற்றொரு அகலமான கடாயை எடுத்து அதில் பாலை ஊற்றி சிறிது சூடாக்கவும்.
பின்பு பால் கோவாவை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்து அது முற்றிலும் கரையும் வரை கலக்க வேண்டும். சில நொடிகள் கழித்து சர்க்கரை சேர்த்து கலக்கவும். கோவா மற்றும் பால் நன்கு கலந்த பிறகு ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்க்கவும்.
கோவா கலவை சிறிது கெட்டியான பிறகு, அதை இறக்கி ஆறவிடவும். இப்போது முதலில் சர்விங் கிளாஸில் ஐஸ் கட்டிகளை வைத்து அதில் கோவாவை வைக்கவும். பால்கோவா மீது தயாரிக்கப்பட்ட ரோஸ் பாலை ஊற்றவும்.
இவை அனைத்தையும் நன்றாக கலக்கவும். அவ்வளவு தான் ருசியான பால்கோவா ரோஸ் மில்க் தயாராகிவிடும்.