கோடை விடுமுறையை கொண்டாட வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான ஒரு ஸ்வீட் ரெசிப்பி உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு செய்து கொடுங்கள். ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது போல நாமும் எப்படி பால் கேக் செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
பால் - 2 லிட்டர் சர்க்கரை - 1 1/2 கப் எலுமிச்சைபழச்சாறு நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு கடாயில் பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பின்னர் இதில் எலுமிச்சை சாறு சிறிது சிறிதாக சேர்த்து கொதிக்க விடவும். எலுமிச்சை சாறை பாலில் பரவலாக விட்டு கொதிக்க விட வேண்டும். அப்போதுதான் பால் திரிந்து வரும். மேலும் எலுமிச்சை சாறு சிறிது நேரம் இடைவெளி விட்டு விட்டு சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும்.
பால் நன்கு திரிந்து வந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்ததும் தண்ணீர் மாதிரி இருக்கும் நன்கு கொதிக்க விட்டு கிளறி விட வேண்டும்.
சர்க்கரையும் பாலும் சேர்த்து திரிந்து தண்ணீர் வற்றியதும் நெய் சேர்க்கவும். பின்னர் மீண்டும் கிளறி விட்டு ஒன்று சேர்ந்து வரும்போது மீண்டும் நெய் சேர்த்து கிளற வேண்டும்.
இதில் உள்ள தண்ணீர் வற்றி திரிந்து வந்ததும் இதனை ஒரு தட்டு அல்லது கப்பில் மாற்றி சிறிது நேரம் அப்படியே வைத்து விடவும். ஒரு ஆறு மணி நேரம் இதனை மூடி அறை சூட்டில் வைத்ததும் நறுக்கி சாப்பிடலாம்.