சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
Advertisment
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
அதேபோல சம்மரில் என்ன சாப்பிட்டாலும் பிடிக்காது. அப்படி நினைப்பவர்கள் இனி சம்மரில் இந்த பழைய சோறு ட்ரை பண்ணுங்கள். சம்மர் ஸ்டார்ட் ஆகிடுச்சி இந்த சம்மருக்கு பழைய சோறு சாப்பிட்டால் அவ்வளவு சுவையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். அப்படிப்பட்ட பழையசோறு எப்படி செய்வது என்று சர்க்கரை சாதமும் வடகறியும் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
பழையசாதம் தயிர் உப்பு பச்சை மிளகாய் சின்ன வெங்காயம்
செய்முறை
பழைய சோறு எடுத்து பிசைந்து அதில் தண்ணீர், மோர், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து கரைத்து குடிக்கலாம். சுவையாக இருக்கும். உப்பு போடாமலும் சாப்பிடலாம். இல்லையென்றால் குறைவான உப்பு சேர்த்து கொள்ளலாம்.
பழைய சோறு உணவில் இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள், குடற்பாதையில் உள்ள பாக்டீரியா ஏற்றத்தாழ்வை சீரமைப்பதோடு, சுய நோயெதிர்ப்பைத் தடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.