ஏராளமான மருத்துவ குணம் காணப்படும் சுண்டைக்காயில், இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பரான மற்றும் டேஸ்டியான சுண்டைக் காய் சட்னி செஃப் தீனா ஸ்டைலில் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
ஏராளமான மருத்துவ குணம் காணப்படும் சுண்டைக்காயில், இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பரான மற்றும் டேஸ்டியான சுண்டைக் காய் சட்னி செஃப் தீனா ஸ்டைலில் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
சுண்டைக் காய் உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கின்றன. மேலும் நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு தருகின்றன.
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும், ஆற்றலும் கிடைக்கிறது. அவ்வகையில், ஆரோக்கியம் மிகுந்து காணப்படும் உணவுகளில் ஒன்று தான் சுண்டைக்காய். இதில், நுண் ஊட்டச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இவை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கின்றன. மேலும் நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு தருகின்றன.
Advertisment
பார்ப்பதற்கு சிறிய பொருள் போல் காணப்படும் இந்த சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, மற்றும் முழுச் செடியுமே மருத்துவ குணமுடையதாக உள்ளது. அவற்றின் இலைகள் உடலில் ஏற்படும் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவையாகவும், அவற்றின் கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்ககளை குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக உள்ளன. மேலும் ஜீரணத் தன்மை தூண்டும் பொருளாகவும் உள்ளன. அத்துடன் இவற்றில் வைட்டமின் ஏ,சி,இ சத்துக்கள் எக்கச்சக்கமாக உள்ளன.
இவ்வளவு மருத்துவ குணம் காணப்படும் சுண்டைக்காயில், இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பரான மற்றும் டேஸ்டியான சுண்டைக் காய் சட்னி செஃப் தீனா ஸ்டைலில் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
சுண்டைக் காய் சட்னி - தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
சுண்டைக் காய் - 300 கிராம் (விதை எடுத்தது) சின்ன வெங்காயம் - 1/2 கிலோ தேங்காய் - 400 கிராம் (கீறியது) வர மிளகாய் - 20 நாட்டு பூண்டு - 20 பற்கள் புளி - எலுமிச்சை அளவு (50 கிராம்) கருவேப்பிலை - 10 உப்பு - தேவையான அளவு கடுகு - தேவையான அளவு உளுந்தம் பருப்பு - 2 டீஸ்பூன் சீரம் - 2 டீஸ்பூன் கடலை பருப்பு - 2 டீஸ்பூன் கடலை எண்ணெய் - தேவையான அளவு
சுண்டைக் காய் சட்னி - சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில் நன்றாக கழுவி விதை எடுத்த சுண்டைக் காய் சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு அவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதன்பின்னர், மற்றொரு கடாய் எடுத்து ஏற்கனவே சுண்டைக் காய் வதக்க பயன்படுத்திய எண்ணெயை எடுக்காமல், சுத்தமாக கடலை எண்ணெய் ஊற்றவும். பிறகு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
பின்னர் பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். அவை வதங்கிய பிறகு கருவேப்பிலை சேர்க்கவும். அத்துடன் வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதன்பின்னர் புளி, உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அவற்றுடன் ஏற்கனவே வதக்கிய சுண்டைக் காய் சேர்க்கவும். இவற்றை சிறிது நேரம் ஆற வைத்து நொறு நொறுப்பாக அரைத்து எடுத்தல் சுவையான சுண்டைக் காய் சட்னி தயார். அவற்றுடன் இட்லி, தோசை வைத்து ருசிக்கலாம்.