இன்று உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். இட்லி தோசைக்கு சுடச் சுட சுண்டல் குழம்பு சுவையாக அல்டிமேட்டாக இருக்கும், இந்த சுண்டல் குழம்பு எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள். ஒருமுறை இட்லி, தோசைக்கு இப்படி சுண்டல் செய்து சாப்பிட்டுப் பாருங்கள் பிறகு விடவே மாட்டீர்கள்.
இட்லி, தோசைக்கு சுண்டல் செய்வது எப்படி?
சுண்டல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
வெங்காயம் 150 கிராம்,
தக்காளி 150 கிராம்,
பச்சை மிளகாய் 10,
கடலை மாவு 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்,
சோம்பு 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை சிறிது அளவு,
சமையல் எண்ணெய் 150 மி.லி,
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு,
வேக வைத்த பட்டானி 250 கிராம் (பச்சை பட்டானி அல்லது பச்சை பட்டானி),
கொத்தமல்லி தேவையான அளவு,
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் கியவற்ரை நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
பச்சை பட்டானியை 3-4 முறை நன்றாகக் கழுவிய பிறகு, 6 மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு, பட்டானியை குக்கரில் நன்றாக வேக வைத்துக்கொள்ளுங்கள், அதாவது பட்டானி கரைகிற மாதிரி நன்றாக வேக வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டவ்வைப் பற்ற வைத்து அதன் மீது ஒரு வானலியை எடுத்து வையுங்கள். வானலி காய்ந்ததும் 150 மி.லி சமையல் எண்ணெய்யை ஊற்றுங்கள், எண்ணெய் காய்ந்ததும் 1 டீஸ்பூன் கடுகு போடுங்கள். கடுகு பொரிந்ததும், கடலைப் பருப்பு 1 டீஸ்பூன் போடுங்கள். கடலைப் பருப்பு சிவந்ததும், அடுத்து, சோம்பு 1 டீஸ்பூன் போடுங்கள். சோம்பு பொரிந்ததும், கறிவேப்பிலை 1 கொத்து போடுங்கள், அடுத்து நறுக்கிய 150 கிராம் வெங்காயத்தைப் போடுங்கள்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள 10 பச்சை மிளகாயைப் போடுங்கள். லேசாக வதங்கிய பிறகு, தக்காளி போட்டு வதக்குங்கள். மஞ்சள் தூள் 1 டேபிள் ஸ்பூன் போடுங்கள். தேவையான அளவு உப்பு போடுங்கள்.
நன்றாக வதங்கிய பிறகு, 2 கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றுங்கள். 1 நிமிடம் கொதிக்க விடுங்கள். வேகவைத்த பட்டானியை எடுத்து இதில் கலந்து விடுங்கள். பிறகு, 2 நிமிடம் நன்றாகக் கொதிக்க விடுங்கள். அடுத்து, கடலை மாவு 2 டேபிள் ஸ்பூனை தண்ணீரில் கரைத்து பரவலாக ஊற்றி விடுங்கள். இப்போது, நன்றாகக் கலக்கி விடுங்கள். கொதித்த பிறகு, கொத்தமல்லி இலையைத் தூவி விடுங்கள். அவ்வளவுதான், சூப்பரான சுண்டல் தயார். இட்லி, தோசைக்கு இப்படி சுடச்சுட சுண்டல் செய்து சாப்பிட்டு பாருங்கள், அல்டிமேட்டாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.