குக்கரில் குழையாமல் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இங்கே

ஞாயிறு என்றாலே நான்வெஜ் தான். அப்படியாக இந்த ஞாயிற்று கிழமையை ஸ்பெஷலாக மாற்ற சிக்கன் பிரியாணி குழையாமல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ஞாயிறு என்றாலே நான்வெஜ் தான். அப்படியாக இந்த ஞாயிற்று கிழமையை ஸ்பெஷலாக மாற்ற சிக்கன் பிரியாணி குழையாமல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
 biryani

சண்டே ஸ்பெஷல் ஆக குக்கரில் குழையாமல் சிக்கன் பிரியாணி சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம். இது குறித்து இந்தியன் ரெசிப்பிஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பதைப் பற்றியும் பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்

பச்சை மிளகாய்
பூண்டு
பட்டை
ஏலக்காய்
கிராம்பு 
சின்ன வெங்காயம்
புதினா 
கொத்தமல்லி
மிளகாய்த்தூள் 
உப்பு
மஞ்சள் தூள்
தயிர்
சிக்கன் 
அரிசி
எண்ணெய்
பிரியாணி இலை 
நட்சத்திர சோம்பு
வெங்காயம் 
தக்காளி 
எலுமிச்சை சாறு 

செய்முறை

Advertisment
Advertisements

பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி, மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள், தயிர் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனில் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இப்போது அரிசி எடுத்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய், பிரியாணி இலை, நட்சத்திர சோம்பு, நறுக்கிய வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி விடவும். 

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கி விடவும். மிளகாய் தூள் ஊற வைத்த சிக்கன் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வைத்து வேகவிடவும். 

சிக்கன் 60% வெந்ததும் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பின்னர் எலுமிச்சை பழத்தை சேர்த்து விடவும். 

ஒரு கொதி வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஊற வைத்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறி விசில் போட்டு மூடிவிட்டு வேகவிட்டு இறக்கவும்.

Cooking Tips Chicken

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: