சண்டே வெரைட்டி டிஸ் செய்ய ஆசையா? அப்போ இன்னைக்கு ட்ராகன் சிக்கன் செய்து பாருங்கள். மொறுமொறுப்பாகவும் ஜூஸியாகவும் ஒரு சிக்கன் ரெஸிபியாகவும் இருக்கும். ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் ட்ராகன் சிக்கன் எப்படி செய்யலாம் என செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
சிக்கன்
உப்பு
மிளகு
சோயா சாஸ்
முட்டை
சோள மாவு
எண்ணெய்
முந்திரி
இஞ்சி
பூண்டு
காய்ந்த மிளகாய்
வெங்காயத்தாள்
குடை மிளகாய்
சோயா சாஸ்
சில்லி சாஸ்
தக்காளி கெட்ச்அப்
சர்க்கரை
சோள மாவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை தேவையான அளவு உப்பு, தேவையான அளவு மிளகு தூள், சோயா சாஸ், முட்டை, சோள மாவு சேர்த்து நன்கு கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
அடுத்ததாக ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மூடி வைத்த சிக்கனை பொரித்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
டிராகன் சிக்கன் | Dragon Chicken Recipe in Tamil
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், முந்திரி பருப்பு, நறுக்கிய இஞ்சி,நறுக்கப்பட்ட பூண்டு,காய்ந்த மிளகாய் சிதறல்கள், வெங்காயத்தாள், குடை மிளகாய் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்ச்அப், சர்க்கரை, தண்ணீர் கரைத்த சோள மாவு , உப்பு சேர்த்து வைக்கவும்.
அடுத்ததாக பொறித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து சாஸ் முழுவதும் கலந்து ஒரு பிரட்டு பிரட்டி எடுத்தால் அவ்வளவு தான் சுவையான சண்டே ஸ்பெஷல் டிராகன் சிக்கன் ரெடியாகிவிடும்.