சண்டே ஸ்பெஷல்; பிரியாணிக்கு டஃப் கொடுக்கும் நெய் சோறு, சிக்கன் கிரேவி; இப்படி செய்து பாருங்க!

சண்டே ஸ்பெஷலாக பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் நெய் சோறு மற்றும் ஸ்பெஷல் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம்.

சண்டே ஸ்பெஷலாக பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் நெய் சோறு மற்றும் ஸ்பெஷல் சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
chicken gravy

குழந்தைகளுக்கு சாதத்தில் நெய் விட்டு பிசைந்து கொடுத்தால் எவ்வளவு விரும்பி சாப்பிடுவார்கள்! அப்படி இருக்க, இதுபோல ருசியான நெய் சோறு செஞ்சு கொடுத்து பாருங்க, குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் அதற்கு அடிமையாகி விடுவார்கள். செய்வதற்கும் ரொம்பவே எளிமையாக இருக்க கூடிய இந்த நெய்ச்சோறு குக்கரில் 10 நிமிஷத்தில் எப்படி செய்யலாம் என்று இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

Advertisment

தேவையான பொருட்கள்: 

பாஸ்மதி அரிசி – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, நெய் – 4 டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, புதினா இலை – ஒரு கைப்பிடி, மல்லி இலை – ஒரு கைப்பிடி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசி மொக்கு – தலா 2, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், தயிர் – ஒரு கப், தண்ணீர் – ஒன்றரை கப், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 

Advertisment
Advertisements

முதலில் பாஸ்மதி அரிசி ஒரு கப் அளவிற்கு எடுத்து நன்கு களைந்து சுத்தம் செய்து அலசி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறினால் போதும், அதற்குள் மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புதினா மற்றும் மல்லி இலைகளை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வையுங்கள். அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு காய விடுங்கள். 

நெய் நன்கு காய்ந்ததும் முந்திரிப் பருப்புகளை உடைத்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வறுத்த முந்திரிப் பருப்பை தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பின் கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்கள் ஒவ்வொன்றாக சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அண்ணாச்சி மொக்கு ஆகியவை வறுபட்டதும் பெரிய வெங்காயத்தை தோல் சீவி மெல்லியதாக நீளவாக்கில் பச்சடிக்கு செய்வது போல நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். 

இதனுடன் காரத்திற்கு 2 பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். பின் தேவையான அளவிற்கு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போக வெங்காயத்தின் நிறம் லேசாக கண்ணாடி பதம் வரை நன்கு வதக்கியதும் நறுக்கி வைத்துள்ள மல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து லேசாக வதக்கி விடுங்கள். அதன் பிறகு தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஒன்று சேர நன்கு கலந்து விட்ட பின்பு ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

இப்போது நீங்கள் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பையும், மீதமிருக்கும் நெய்யையும் சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து விட்டு தேவையான அளவிற்கு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும். தண்ணீர் கொதித்ததும் மூடி போட்டு 2 லிருந்து 3 விசில் விட்டு எடுத்தால் போதும், மணக்க மணக்க நெய் சோறு சூப்பராக தயாராகி விட்டிருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, உங்க வீட்டில் இருப்பவர்களையும் அசத்துங்க.

சிக்கன் கிரேவி -தேவையான பொருட்கள்:

ஒரு கிலோ சிக்கன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட், தயிர், பெரிய வெங்காயம், 
தக்காளி, எண்ணெய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை 

செய்முறை:

முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அலசி ஒரு பௌலில் எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு பேஸ்ட், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து சுமார் அரைமணி நேரம் மூடி போட்டு ஊறவைத்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் நட்சத்திர சோம்பு சேர்த்து கலந்து சிவந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையாக வதங்கியவுடன் மரினேட் செய்த சிக்கனை போட்டு 5 நிமிடங்களுக்கு நன்கு கலந்து வதக்கவும்.

சிக்கன் துண்டுகள் எல்லாம் நன்கு வதங்கி எண்ணெய் எண்ணெய் பிரிந்துவரும் தருவாயில் கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு கொள்ளுங்கள். பின்னர் கடாயை மூடி மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு சமைக்கவும். இடையிடையே சிக்கனை அடிபிடிக்காமல் கலந்துவிட்டு கொள்ளுங்கள். சிக்கன் நன்றாக வெந்து கிரேவி திக்காக மாறி மேலே எண்ணெய் மிதந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி ரெடி.!

Chicken

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: