ஞாயிற்று கிழமை காலையிலேயே விதவிதமாக என்ன டிஷ் செய்வது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? அப்போ கொஞ்சம் நெத்திலி மீன் எடுத்து சுவையான நெத்திலி வறுவல் செய்யுங்கள். வெறும் அரைமணி நேரம் போதும் பக்கத்து வீடு வரை மணக்கும் நெத்திலி மீன் சூடாகவும் சுவையாகவும் செய்யலாம். நெத்திலி மீன் வறுவல் செய்வது பற்றி ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன்
இஞ்சி பூண்டு விழுது
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லித்தூள்
கடலை மாவு
உப்பு
மிளகு தூள்
எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு மசாலா தயாரிக்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு, மிளகு தூள், கடலை மாவு, தண்ணீர் சேர்த்து கலக்கவும். இந்த மசாலா கொட்டியாக இருக்க வேண்டும்.
இந்த மசாலாவை நெத்திலி மீனின் இருபுறமும் தடவி ஒரு முப்பது நிமிடம் மீனை மசாலாவில் ஊற வைக்கவும். அடுத்து கடாயில் எண்ணெய் சேர்த்து இந்த மசாலா தடவிய மீனை இரு புறமும் பொறிக்கவும்.
நெத்திலி மீன் வறுவல் | Nethili Fish Fry Recipe in Tamil | Anchovy Fish Fry
அவ்வளவு தான் கொஞ்சம் பெரிய வெங்காயம் எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் சூடான மற்றும் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்.