இட்லி மாவு சிறிது அளவு மட்டும் இருக்கும்போது, என்ன செய்வது என்று புரியாமல் முழித்துகொண்டு இருந்த அனுபவம் உண்டா? கவலையே பட வேண்டாம், இட்லி மாவு 1 கப் இருந்தால் போதும், சைட் டிஷ் இல்லாமல் ஒரு சூப்பரான டின்னர் தயார் செய்யலாம்.
இட்லி மாவில் சுவையான சூப்பரான டின்னர் செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு 1 கப்
வெங்காயம் 1 பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
கேரட் 1 பெரியது
கறிவேப்பிலை 1 கொத்து பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
கொத்து மல்லி பொடியாக நறுக்கியது.
மஞ்சள் தூள் 2 சிட்டிகை
தனி மிளகாய் தூள் முக்கால் டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1 கப் இட்லி சுடும் பதத்தில் உள்ள மாவை எடுத்துக்கொள்ளுங்கள். மாவு புளித்து இருந்தாலும் பரவாயில்லை. அதனுடன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, ஒரு பெரிய சைஸ் கேரட்டை துருவி சேர்த்துக்கொள்ளுங்கள், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ளுங்கள். அதே மாதிரி பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்து 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். முக்காள் டீஸ்பூன் அளவு தனி மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது நன்றாகக் கலக்குங்கள்.
அடுத்து, ஒரு பான் எடுத்து ஸ்டவ்வில் வைத்து பற்றவையுங்கள். தீயை சிம்மில் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போடுங்கள். கடுகு பொரிந்ததும், கலக்கி வைத்திருக்கும் மாவை, பானில் தோசை போல ஊற்றி பரப்புங்கள், இப்போது மூடிவைத்துவிடுங்கள். வெந்த பிறகு, உடையாமல் திருப்பி பக்குவமாக திருப்பி போடுங்கள். கோல்டன் கலரி வெந்து வந்திருக்கும். மீண்டும் மூடி வேக வைத்து வேக வையுங்கள். அனல் எப்போதும் சிம்மில்தான் இருக்க வேண்டும். இல்லையென்றல், தீய்ந்து கருகிவிடும். முழுமையாக வெந்ததும், சூப்பரான டின்னர் ரெடி. அதை துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம். அல்லது அப்படியேயும் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“