இன்றைக்கு ஒரு சூப்பரான சூப்பரான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக மணமும் சுவையும் அள்ளும் வெங்காய சாதம் எப்படி செய்வது என்று இங்கே கூறுகிறோம்.
நீங்க மிஸ் பண்ணக்கூடாத லஞ்ச் பாக்ஸ் ரெசிபி என்றால் நிச்சயமாக இந்த மணமும் சுவையும் அள்ளும் வெங்காய சாதமாகத்தான் இருக்கும். இந்த வெங்காய சாதம் எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்.
வெங்காய சாதம் செய்முறை:
ஸ்டவ்வைப் பற்ற வைத்து, வானலியை வைத்து காய வையுங்கள், 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றுங்கள், 1/4 (கால்) ஸ்பூன் கடுகு போடுங்கள். கடுகு பொரிந்ததும், தலா 1/4 (கால்) ஸ்பூன் அளவு, சீரகம், சோம்பு போடுங்கள். பொரிந்ததும் 3 அளவான வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். 2 பச்சை மிளகாய் நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றாக வதக்கிய பிறகு,
இப்போது 2 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் அளவு வெறும் மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் அளவு தனியா தூள், 1/4 (கால்) ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்குங்கள். மூடி வைத்துவிட்டு ஒரு நிமிடம் கழித்து திறந்து சிறிது அளவு கறிவேப்பிலையை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். இப்போது, அதனுடன் சோறு சேர்த்து நன்றாகக் கிளறிவிடுங்கள். அவ்வளவுதான் சூப்பரான சுவையான வெங்காய சாதம் தயார்.
இந்த வெங்காய சாதத்துடன் அப்பளம் சேர்த்து சாப்பிட்டால் செம சுவையாக இருக்கும். மணமும் சுவையும் அள்ளும் வெங்காய சாதத்தை இன்று உங்கள் லஞ்க்கு தயார் செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“