ஆமை வடை, மெதுவடை என பல வகையான வடை சாப்பிட்டு இருப்போம். ஆனால் சுரைக்காய் வடை இதுவரை சாப்பிட்டிருக்க மாட்டோம். அதுவும் கோடை காலத்தில் வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் வடை எப்படி செய்வது என்று அன்னம் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சுரைக்காய்
கடலை பருப்பு
பாசிபருப்பு
பச்சை மிளகாய்
சீரகம்
கருவேப்பிலை
கொத்தமல்லி தழை
பெரிய வெங்காயம்
கேரட்
அரிசி மாவு
எண்ணெய்
செய்முறை
பிஞ்சு சுரைக்காய் எடுத்து தோல் சீவி காய் சீவுவதை வைத்து சீவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், பச்சை மிளகாய் இரண்டையும் அரைக்கவும். இந்த தண்ணீரில் ஊற வைத்த கடலைப்பருப்பையும் பாசிப்பருப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் பின்னர் இவற்றை சீவி வைத்துள்ள சுரைக்காயில் சேர்த்துக் கொள்ளவும்.
"மொறு மொறுன்னு சுரைக்காய் வடை " Recipes in Tamil
கருவேப்பிலை கொத்தமல்லி தழை எள்ளு நறுக்கிய பெரிய வெங்காயம், கேரட் ஆகியவற்றை சேர்த்து அரிசி மாவு சிறிது சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர் எப்போதும் போல வடைதட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான சுரைக்காய் வடை ரெடியாகிவிடும்.