மதுரையில் உள்ள உணவுகளுக்கு என்று தனி சிறப்பு உள்ளது. சுவையும் நன்றாக இருக்கும். இனிப்பு முதல் கறிசோறு வரை மதுரையில் உள்ள உணவுகளை அடுத்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட மதுரை ஸ்பெஷல் பால் பன் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு
சர்க்கரை
பேக்கிங் சோடா
நெய்
தயிர்
தண்ணீர் அல்லது பால்
செய்முறை
ஒரு கப்பில் மைதா மாவு, சர்க்கரை பவுடர், பேக்கிங் சோடா, தயிர், நெய் சேர்த்து சிறிது தண்ணீர் அல்லது பால் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
பின்னர் வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு அதை கரைத்துக் கொள்ளவும். இதற்கு பதம் தேவையில்லை. இந்த மாவை உருண்டையாக பிடித்து எண்ணெயில் பொரித்து சிவந்ததும் எடுக்கவும்.
பால் பன் இப்படி செய்து கொடுங்க உடனே காலியாகும் | Madurai Paal Bun Recipe in Tamil | Madurai Paal Bun
பின்னர் இதை ஆறவைத்து சர்க்கரை பாகில் போட்டு எடுத்தால் வெளியே ஸ்வீட் உள்ளே சாஃப்ட் மதுரை பேமஸ் பால்பன் ரெடியாகிவிடும்.
இந்த முறையை பின்பற்றி மதுரை பேமஸ் பால் பன் ஈஸியாக செய்து விடலாம். திடீரென்று வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் கூட அவர்களுக்கு சட்டென்று இந்த பலகாரத்தை செய்து கொடுங்கள். சுவையாகவும் இருக்கும். உங்களுக்கு வேலையும் சட்டென்று முடிந்து விடும். சர்க்கரை உங்களுக்கு தேவையான அளவு பார்த்து சேர்த்து கொள்ளுங்கள். மதுரை பேமஸ் ஸ்வீட் இனி எல்லா வீட்டிலும் செய்யலாம்.