தொண்டை கரகரப்புக்கு இதமான, மாலை வேளைகளில் சுவைக்க சூப்பரான ஸ்வீட் கார்ன் சூப் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஸ்வீட் கார்ன் – 1 கப்
சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
எலுமிச்சை – ஒரு டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் அடுப்பில் குக்கர் வைத்து அதில் ஸ்வீட் கார்னை (இனிப்பு சோளம்) போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். அடுத்து முழு சோளமாக இருந்தால் அதல் இருந்து பருப்பு எடுத்து வைக்கவும். இப்போது ஒரு பாத்திரம் எடுத்து அதில் சோள மாவினை சேர்த்து சிறிது நீர் சேர்த்து கரைக்கவும். அடுப்பில் வைத்து கரைக்கவும். ஸ்வீட் கார்னை சேர்க்கவும்.
கடைசியில் சோயா சாஸ், மிளகுத் தூள், எலுமிச்சை, உப்பு சேர்த்து இறக்கவும். அவ்வளவு தான் ஸ்வீட் கார்ன் சூப் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“