கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
வெயில் சூட்டை தணிக்கும் லெஸி எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
தயிர் - 500 கிராம் சர்க்கரை - 5 மேசைக்கரண்டி ஐஸ் கட்டிகள் ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி குங்குமப்பூ நறுக்கிய பிஸ்தா நறுக்கிய பாதாம்
செய்முறை
பிளெண்டரில் ஐஸ் கட்டிகள், தயிர், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக அரைக்கவும். கலவை மென்மையாக வந்ததும், அதனை ஒரு டம்ளரில் ஊற்றவும். மேலே சிறிதளவு குங்குமப்பூ தூவி அலங்கரிக்கவும்.
நறுக்கிய பிஸ்தா மற்றும் பாதாம் பருப்புகளைத் தூவினால் சுவையும், அழகும் கூடும். இந்த எளிய லஸ்ஸி கோடைக்கு மிகவும் இதமானது. தயிரின் புளிப்பும், சர்க்கரையின் இனிப்பும், ஏலக்காயின் நறுமணமும் சேர்ந்து ஒரு அருமையான சுவையை கொடுக்கும்.
குங்குமப்பூ மற்றும் நட்ஸ் மொறுமொறுப்பு தன்மையையும், கூடுதல் சுவையையும் சேர்க்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்தக்கூடிய இந்த லஸ்ஸியை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். விருந்தினர்களுக்கும் இதனை செய்து கொடுக்கலாம்.