குழையாமல் தித்திப்பாக இனிப்பு செய்ய வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது. தித்திப்பாக குழையாமல் கேசரி செய்ய முக்கியமான ஒரு பொருளை சேர்க்க வேண்டியது அவசியம். அது என்ன என்று பார்ப்போம்.
2/5
முதலில் குழையாமல் கேசரி செய்ய தேவையான பொருட்களின் பட்டியலை பார்ப்போம். ரவை, நெய், சர்க்கரை, தேங்காய் எண்ணெய், கேசரி பவுடர், முந்திரி, திராட்சை, பிஸ்தா இவை அனைத்தையும் உங்கள் அளவுக்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்.
3/5
ஒரு கடாயை மீடியம் ஃபிளேமில் வைத்து அதில் நெய் சேர்த்து காய்ந்த திராட்சை, பிஸ்தா முந்திரி இவை அனைத்தையும் வருத்து தனியாக தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதே நெய்யுடன் சேர்த்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி ரவையை வறுக்க வேண்டும்.
Advertisment
4/5
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த ரவையை போட்டு கட்டி இல்லாமல் கரைத்து பின்னர் நிறத்திற்காக சிறிது கேசரி பவுடர், இனிப்புக்கு சர்க்கரை சேர்த்து கலந்து நெய் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை கிளறி இறக்கவும்.
5/5
பின்னர் ஒரு தட்டில் நெய் விட்டு அதில் இந்த கேசரியை கொட்டி சமமாக பரப்பி சிறிது நேரம் காய விட்டு வெட்டி எடுத்தால் அல்வா துண்டு மாதிரி கேசரி ரெடியாகிவிடும்.