பொங்கல் வந்துவிட்டது. இனி அனைவரும் சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது என்று தேட ஆரம்பித்து இருப்பீர்கள். எவ்வளவு வெல்லம் சேர்த்தாலும் இனிப்பு சுவை இல்லை என்று இனி யாரும் பிலம்பத்தேவையில்லை. அதற்கு தான் செஃப் தாமு ஒரு சூப்பரான வழி சொல்கிறார். அதன்படி கேட்டு சுவையாக இனிப்பாக பொங்கல் ஒருமுறை செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு
பச்சரிசி
வெல்லம்
உப்பு
நெய்
முந்திரி பருப்பு
திராட்சை
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
செஃப் தாமு ஸ்டைலில் சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது என்று பார்ப்போம். ஒரு குக்கரில் பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் கழுவி வேக வைக்க வேண்டும்.
குழைய வேக வைத்துதும் குக்கர் மூடியை திறந்து அடுப்பை மிதமான சூட்டிலேயே வைக்கவும். அதில் உடைத்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து கலந்து விடவும். இதில் சுவையை கூட்ட சிறிது தூள் உப்பு சேர்த்து கலக்கவும். இனிப்பு சுவை அட்டகாசமாக இருக்கும்.
Sakkarai Pongal ( pongalo pongal pongalo pongal) Iniya pongal nal vazthukal
பின்னர் வேறொரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரிப் பருப்பு, திராட்சை சேர்த்து சிறிது வதக்கி தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி பொங்கலில் எடுத்து கொட்டி கிளறி விட்டால் சுவையான சர்க்கரை பொங்கல் ரெடியாகிவிடும்.
இந்த வருடம் இந்த மாதிரி பொங்கல் செய்து பாருங்கள். இந்த சர்க்கரை பொங்கல் ரெஸிபியுடன் சேர்த்து அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.