பாப்கான் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதனை கடையில் தான் வாங்க முடியும், வீட்டில் செய்ய முடியாது என்றே பலர் செய்யாமல் இருப்பார்கள். ஆனால் ஸ்வீட் பாப்கான் வீட்டிலேயே ஈசியாக எப்படி செய்வது என்று டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
சர்க்கரை
பட்டர்
Advertisment
Advertisements
சோளம்
செய்முறை
ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து முதலில் கேரமல் செய்ய வேண்டும். அதற்கு சூட்டிலேயே அந்த சர்க்கரையை கரைக்க வேண்டும். விடாமல் கரைத்து விட்டிருக்கும் போது நமக்கு கேரமல் கிடைக்கும். இறக்குவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன் அதில் பட்டர் சேர்த்து மிதமான சூட்டிலேயே கிளறி விடவும். பின்னர் சிறிது நேரம் கழித்து தண்ணீர் விட்டு கரைத்துக் கொண்டே இருக்கும் போது நுரை பொங்கி அடங்கியபின் அதை இறுக்கி ஆறவிடவும்.
பின்னர் ஒரு சட்டியை வைத்து சூடாக்கி அதில் சோளம் போட்டு சிறிது எண்ணெய், உப்பு போட்டு அனைத்து பக்கமும் பரவும் படி கலந்து விட்டு மேலே ஒரு மூடி வைத்து மூடிவிட்டால் பாப்கான் மாதிரி பொரிந்து வரும். பின்னர் இதை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும் இதில் தயார் செய்து வைத்துள்ள கேரமலை சேர்த்து கலந்துவிட்டு சாப்பிட்டால் சுவையான கேரமல் பாப்கான் ரெடி ஆகிவிடும்.