குறைந்த விலையில் அதிக சத்துக்களைக் கொண்ட உணவுகளைப் பற்றி பேசும் போது, சக்கரவள்ளிக்கிழங்கு ஒரு சிறந்த தேர்வாகும். இது குழந்தைகளை பலசாலிகளாக மாற்ற உதவும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான சிற்றுண்டி. சக்கரவள்ளிக்கிழங்கு வடை செய்வது மிகவும் எளிது. இதனை எப்படி செய்வது என்று செல்விஸ்வே இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சக்கரவள்ளிக்கிழங்கு
உப்பு
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
கறிவேப்பிலை
மல்லித்தழை
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
சோள மாவு
எண்ணெய்
செய்முறை:
முதலில், சக்கரவள்ளிக்கிழங்கை நன்கு கழுவி, இட்லி பாத்திரத்தில் சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் தோலை உரித்து, கட்டியில்லாமல் நன்கு மசித்துக் கொள்ளவும். பிறகு, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோள மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசையவும். இந்த கலவையை 10 நிமிடம் ஊறவிட்டு, பின்னர் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வடை போல தட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு வடைகளாக போட்டு பொன்னிறமாக சுடவும். சக்கரவள்ளிக்கிழங்கு வெறும் கிழங்கு என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். இதில் வைட்டமின் ஏ, சி, பி6, மற்றும் இரும்புச்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு வாரத்திற்கு ஒருமுறையாவது சக்கரவள்ளிக்கிழங்கு உணவுகளை கொடுக்க வேண்டும். இந்த சக்கரவள்ளிக்கிழங்கு வடை ரெசிபியை ஒருமுறை முயற்சித்துப் பாருங்கள், உங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி உண்பார்கள்.
சக்கரவள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் உள்ளது, இது உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. வைட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் அவசியம், குறிப்பாக மாலைக்கண் நோய் மற்றும் வயது தொடர்பான பார்வை இழப்பைத் தடுக்க உதவுகிறது. எனவே இதை பிள்ளைகளுக்கு மிகவும் சுவையான மற்றும் ஹெல்தியான ஸ்நாக்ஸ் ஆக இருக்கும்.