வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சட்டென்று 5 நிமிடத்தில் செய்து கொடுக்க ஈஸியான ஒரு ஸ்நாக்ஸ் ரெஸிபி. சேமியா அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வறுத்த சேமியா
முந்திரி
நெய்
நாட்டுச்சர்க்கரை
பால்
ஏலக்காய்
செய்முறை
சேமியாவை வைத்து வீட்டிலேயே சுவையாக இனிப்பு வகை எப்படி செய்வது என்று பார்ப்போம். ஒரு கடாயில் சேமியா சேர்த்து சிறிது சிவந்து வரும் வரை வறுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் முந்திரிப் பருப்பு, ஏலக்காய் சேர்த்து பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
New Year Special Sweet 10 நிமிடத்தில் ஈசியா ஹெல்தியா இப்படி செஞ்சி கொடுங்க போட்டி போட்டு சாப்/Sweet
பின்னர் அதே கடாயில் பால் கொதிக்க வைத்து அதில் இந்த பொடியை சேர்த்து கிளறி திக்காக வந்ததும் அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கலந்து சிறிது நெய் விட்டு கலந்து விடவும்.
இது கடாயில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்போது முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து இதனுடன் சேர்த்து இறக்கினால் சேமியா அல்வா ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“