காய்ச்சல் சரியாகிவிட்டாலும் உடல் முழுவதும் வலியாக உணர்கிறீர்களா? இது தசைகள் வறட்சி அடைவதாலும், நீர் இழப்பினாலும், நோய் எதிர்ப்பு அமைப்பு அதிக செயல்படுவதாலும் ஏற்படக்கூடியது. ஆயுர்வேத மருத்துவர் ஜெயரூபா உடல் வலியை குறைக்கும் மிக எளிய மற்றும் இயற்கையான தீர்வுகளை பற்றி ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
காய்ச்சலுக்குப் பிறகு உடல் வலி வருவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு அமைப்பு Cytokines எனும் வேதிப்பொருளை உருவாக்கி, கிருமிகளை அழிக்கும் போது தசைகளிலும் வீக்கம் ஏற்படும். அதுமட்டுமின்றி நீர் இழப்பு காரணமாக தசைகள் பலவீனமடைகின்றன. செரிமான சக்தி குறைந்து, உடல் சரியான சத்துக்களை பெற முடியாமல் போகிறது.
அடுத்து உடல்வலிக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி மருத்துவர் ஜெயரூபா கூறியிருப்பதாவது,
உடல் வலிக்கு சாப்பிட வேண்டிய உணவுகள்:
1. பஞ்சமுட்டி கஞ்சி – (துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுந்து, பச்சை பருப்பு, அரிசி) சேர்த்து தயாரிக்கலாம். இது தசைகளுக்கு பலம் கொடுக்கும்.
2. இளநீர் – உணவுக்கு பின் அருந்துவது நீர் இழப்பை சரிசெய்யும்.
3. பூண்டு-சீரகம் கஞ்சி – செரிமான சக்தியை அதிகரிக்க உதவும்.
4. முருங்கை & கருவேப்பிலை கஷாயம் – கால்சியம், இரும்புச்சத்து அதிகம் தரும்.
5. நிலவேம்பு கஷாயம் (30ml) – உடல் வீக்கம் குறைக்கும்.
6. நொச்சி கஷாயம் (மிளகு, பூண்டுடன்) – வலியைக் குறைக்கும்.
அடுத்து உடல் வலிக்கு வெளிப்புற தீர்வுகள் பற்றி பார்ப்போம்.
1. உப்பு வறுத்து சூடு வைத்தல் – வீக்கம் குறைக்கும்.
2. தைலம் தடவி மசாஜ் செய்யலாம் – மூட்டுவலிக்கு சிறந்த தீர்வு.
3. தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து தேய்க்கலாம் – தசை வலியைக் குறைக்கும்.
காய்ச்சலுக்குப் பிறகு உடல் வலி தொடர்கிறதா? "ஆயுர்வேதத்தின் உன்னத தீர்வு!
இவ்வாறான ஆயுர்வேத வழிமுறைகளை பின்பற்றி, மருந்துகள் எடுக்காமல் இயற்கையான முறையில் உடல் வலியை சரி செய்யலாம். தினசரி சுவாசப் பயிற்சிகள் செய்தால் உடல் வலி மேலும் விரைவாக குறையும் என்கிறார் மருத்துவர் ஜெயரூபா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.