ஒவ்வொரு நாளும் காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு பதிலாக சில பானங்களையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
தினமும் காபி, டீ குடிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை அதற்கு பதிலாக தேநீரில் ஒரு சிறிய மாற்றம் செய்து பருகலாம் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் நெல்லிக்காயை கசாயமாக போட்டு, அதில் தேன் கலந்து குடிக்கலாம். குறிப்பாக, நெல்லிக்காய் பொடியை ஒரு ஸ்பூன் போட்டு, அத்துடன் ஒரு கிளாஸ் இளஞ்சூடான தண்ணீர் ஊற்றி தேன் கலந்து குடிக்கலாம். இந்த நெல்லிக்காயின் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை வயதான பின்பும் கூட மீட்டெடுக்க முடியும்.
இதேபோல், ஒரு நாள் ஆவாரை தேநீர் குடிக்கலாம். ஒரு நாள் வெந்நீரில் எலுமிச்சை, இஞ்சி சாறு கலந்து குடிக்கலாம்.
மேலும், தேநீரை குடிக்கும் முறையும் ஒன்றும் உள்ளது. அதன்படி, வெறும் தேயிலையை கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் போட்டு, அதனை சிறிது நேரம் முடி வைத்து குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதை தான் தேநீர் எனக் கூறுவார்கள்.
காலையில் இதை குடித்தால் ஆரோக்கியம் நிச்சயம்! Best drinks to drink in the morning | Healthy drinks
உலகிலேயே தேநீரில் பால் சேர்த்து குடிப்பவர்கள் இந்தியர்கள் தான் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். தேநீரின் பெரும்பாலான சத்துகள் பால் சேர்ப்பதால் நம் உடலுக்கு கிடைப்பதில்லை. எனவே தேநீரில் பால் சேர்ப்பது தவறான ஒன்றாகும்.
எனவே, பிளாக் டீ, கிரீன் டீ ஆகியவற்றையும் தேநீராக குடிக்க வேண்டும் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான டீ குடித்து போர் அடித்து விட்டது என்றால் வெவ்வேறு மாதிரியான டீ அருந்தலாம். கிரீன் டீ, லெமன் டீ, நெல்லிக்காய் டீ, கரிசாலை டீ, ஆவாரம்பூ டீ போன்ற டீ வகைகளை எடுத்து கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“