taking rice in morning is good or not | Indian Express Tamil

காலையில் சாதம் சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்

நம்மில் பலரால் சாதத்தை தவிர்க்க முடியாது. இரவு நேரத்தில் மட்டும் அதிகம் சாதம் சாப்பிடுவோம். இந்நிலையில் முடிந்த வரை சாதத்தை தவிர்க்க வேண்டும் என்று எல்லா ஆய்வுகளும், ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்.

இந்நிலையில் இரவில் சாதம் சாப்பிடாமல் காலையில் சாப்பிடலாமா என்ற கேள்வி எழலாம். நீங்கள் வடகிழக்கு இந்தியா சென்றால் அங்கு நிச்சயம் சாதத்தை காலை உணவாக எடுத்துகொள்வார்கள்.

இதுபோல ஜப்பானிலும் அரிசி சாதத்தை காலையில் சாப்பிடுவார்கள். இந்நிலையில் வெள்ளையான அரிசி சாதத்தை தவிர்த்து உமி உள்ள மற்ற அரிசி வகையை நாம் காலையில் உணவாக சாப்பிடலாம்.

ஒரு நாளைக்கு கார்போஹைட்ரேட் தேவையை அரிசி சாதம் பூர்த்தி செய்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு, சர்க்கரை நோயாளிகளும் காலையில் அரிசி சாப்பிட்டால், திடீரென்று ரத்த சர்க்கரை அதிகரிக்கும் தன்மை நீங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அரிசியுடன் காய்கறி, முட்டை, மோர் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால், கார்போஹைட்ரேட்டை உடல் குறைவாக எடுத்துக்கொள்ளும். காலையில் அரிசி சாதம் சாப்பிடும்போது, அதிகமாக சாப்பிடக் கூடாது ஆனால் ஒரு கப் வரை சாதம் சாப்பிடலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Taking rice in morning is good or not