தேவையான பொருட்கள்
புளிக்கரைசல்
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
பூண்டு
வர மிளகாய்
எண்ணெய்
கடுகு
கருவேப்பிலை
கட்டி பெருங்காயம்
வெந்தயம்
எள்ளு
மஞ்சள் தூள்
உப்பு
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் தூளாக்கப்பட்ட கட்டி பெருங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் கருவேப்பிலை, வரமிளகாய் கிள்ளி போட்டு மிளகாய் நிறம் மாறும் வரை அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து வதக்கவும். பின்னர் பூண்டு சேர்த்து வதக்கவும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கியவுடன் புளி கரைசல் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஒரு டீஸ்பூன் எள்ளு, வெந்தயம், கருவேப்பிலை மூன்றையும் வறுத்து கொரகொரப்பாக மிக்ஸி அல்லது அம்மி கல்லில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் புளி கரைசல் கொதி வந்ததும் அரிசி சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு அரைத்து வைத்த பொடியை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து குக்கர் மூடி போடவும்.
பின்னர் மூன்று விசில் விட்டு இறக்கி கொத்தமல்லி தழை தூவி சாப்பிட ஆரம்பிக்கலாம். தேவைப்பட்டால் வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து கொள்ளலாம். எப்போதும் போல சாப்பாட்டிற்கு தண்ணீரின் அளவு சரியாக இருக்க வேண்டும். அதேபோல விசிலும் எப்போதும் போல விடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“