லஞ்ச் பாக்ஸ் ரெசிபி; குக்கரில் புளி சாதம் செய்வது எப்படி?

இனி புளி கரைசலும் சாதமும் தனித்தனியே செய்ய தேவையில்லை. சட்டென்று குக்கரில் வெறும் 10 நிமிடத்திலேயே புளிசாதம் செய்து விடலாம்.

இனி புளி கரைசலும் சாதமும் தனித்தனியே செய்ய தேவையில்லை. சட்டென்று குக்கரில் வெறும் 10 நிமிடத்திலேயே புளிசாதம் செய்து விடலாம்.

author-image
WebDesk
New Update
புளிசாதம்

குக்கரில் புளிசாதம்

புளி சாதம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் டக்குனு ஈஸியா குக்கரில் செய்து எப்போதும் சூடாக சாப்பிடலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 

Advertisment

ஆம் இனி புளி சாதம் செய்ய புளி கரைசல், சாதம் தனித்தனியே செய்ய தேவையில்லை. வெறும் 10 நிமிடத்தில் குக்கரிலேயே டேஸ்டியான புளிசாதம் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய்
கடுகு 
கருவேப்பிலை
கட்டி பெருங்காயம்
புளிக்கரைசல்
உளுத்தம் பருப்பு
கடலை பருப்பு
பூண்டு
வர மிளகாய்
வெந்தயம்
எள்ளு
மஞ்சள் தூள்
உப்பு

Advertisment
Advertisements

செய்முறை

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் தூளாக்கப்பட்ட கட்டி பெருங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின்னர் கருவேப்பிலை, வரமிளகாய் கிள்ளி போட்டு மிளகாய் நிறம் மாறும் வரை வதக்கவும். அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து வதக்கவும். பின்னர் பூண்டு சேர்த்து வதக்கவும். 

பின்னர் புளி கரைசல் ஊற்றி தேவையான அள்வு உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் ஒரு டீஸ்பூன் எள்ளு, வெந்தயம், கருவேப்பிலை மூன்றையும் வறுத்து கொரகொரப்பாக  அரைத்து எடுத்து கொள்ளவும். 

உடனடி புளி சாதம் குக்கரில் செய்வது எப்படி | Instant Tamarind Rice | Instant Puli Sadham

பின்னர் புளி கரைசல் கொதி வந்ததும் அரிசி சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு அரைத்து வைத்த பொடியை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து குக்கர் மூடி போடவும். 

பின்னர் மூன்று விசில் விட்டு இறக்கி கொத்தமல்லி தழை தூவி சாப்பிட ஆரம்பிக்கலாம். தேவைப்பட்டால் வேர்க்கடலை சேர்த்து கொள்ளலாம். எப்போதும் போல சாப்பாட்டிற்கு தண்ணீரின் அளவு சரியாக இருக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cooking Tips Lunch Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: