தேவையான பொருட்கள்
எண்ணெய்
மிளகு
கருப்பு எல்
கடுகு
வெந்தயம்
உப்பு
புளி கரைசல்
காய்ந்த மிளகாய்
கருவேப்பிலை
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் இல்லாமல் மிளகு, கருப்பு எல், கடுகு அனைத்தையும் ஒரே அளவில் தனித்தனியே வறுக்க வேண்டும்.
venkatesh bhat makes puliyodharai | temple style puliyodharai |pulikachal recipe in tamil |pulisadam
பின்னர் அரை டீஸ்பூன் வெந்தயத்தை வறுத்து இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் வேர்க்கடலை,கருவேப்பிலை போட்டு மீடியம் ஃபிளேமில் வறுக்க வேண்டும். அது வறுபட்டதும் புளி கரைசல் சேர்த்து பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி சிறிது வெள்ளம் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மிளகு பவுடரை சேர்த்து கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதி விடவும்.
அதில் சுடு சோற்றை கலந்து சிறிது கருவேப்பிலை தூவி இறக்கினால் சூடான புளியோதரை ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“