குக் வித் கோமாளி சீசன் 7 தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கேரளாவின் ஃபேமஸ் உணவாக எரிசேரி செய்து அசத்தியுள்ளார். அந்த உணவை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் - அரை கப் (நறுக்கியது)
பாசி பருப்பு - 5 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 5 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
சீரகம் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிக்க: ககுடு உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய், துருவிய தேங்காய், கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு பிரஷர் குக்கரில் கால்கப் பாசிப்பருப்பைச் சேர்த்து 3 நிமிடம் வறுக்கவும். அடுத்து அரை கப் துவரம்பருப்பைச் சேர்த்து, கழுவி, 2 கப் தண்ணீர் சேர்க்கவும். பருப்பை 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் பரங்கிக்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் (நீங்கள் குழம்பு மிளகாய் தூள் பயன்படுத்தலாம்), மிளகுத் தூள், உப்பு, சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
அதன்பிறகு, மிக்சியில் தேங்காய், சீரகம் சேர்த்து மென்மையான பேஸ்ட் மாதிரி அரைத்து, பூசனிக்காய் கலவையில் சேர்க்கவும். அதன்பிறகு வேக வைத்த பருப்பையும் அதில் சேர்த்து 3 நிமிடங்கள் வேக வைக்கவும.
அடுத்து ஒரு குழிக்கரண்டியில், தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, சிவப்பு மிளகாய், துருவிய தேங்காய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அதில் கொட்டினால் சுவையாக கேரளா ஸ்டைல் எரிசேரி தயார். சாதத்துடன் அப்பளம் சேர்த்து இதை பரிமாறலாம்.