உடல் ஆரோக்கியத்தை நாம் உண்ணும் உணவை வைத்தே பாதுகாத்துக்கொள்ளலாம் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் மழைகாலத்தில் சளி இருமல் வராமல் தடுக்க எள்ளு குழம்பு எப்படி வைப்பது என்று நடிகை சீதா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். பார்ப்போமா?
தேவையான பொருட்கள்: (தோராயமாக)
கருப்பு எள்ளு – 3 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
வரமிளகாய் – காரத்திற்கு ஏற்ப
கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
துருவிய தேங்காய் – ஒரு மூடி
பூண்டு – 15 பல்
வெள்ளம் – சிறிதளவு
பெருங்காயம் – ஒரு கட்டி
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
முருங்கைக்காய் – 2
புளி கரைசல் – ஒரு கப்
செய்முறை:
முதலில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி, எள்ளு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சிவந்து வரும் வரை வறுக்கவும். அதன்பிறகு அதில்,கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.
இந்த கலவை நன்றாக வறுபட்டவுடன், அதில் வரமிளகாய் சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்வும்.
சூடு தணிந்தவுடன், அதனை ஒரு மிக்ஸி ஜாரில் வைத்து பவுடராக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அரைத்த பவுடருடன் துருவிய தேங்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஏற்றி அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து 4 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக காய்ந்தவுடன், பெருங்காயம் சேர்த்துவிட்டு. அடுத்து கடகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து இந்த கலவையில் பூண்டு, கருவேப்பிலை சேர்த்தவுடன், புளி கரைசலை ஊற்றவும். சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து வைத்திருந்த மசாலாவையும் அதனுடன் சேர்க்கவும்.
அடுத்து நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும். குழம்பு நன்றாக கொதித்து வந்தவுடன், அதில் சிறிதளவு வெள்ளம் சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு கொதி வந்தவுடன் இறக்கினால், சுவையான எள்ளு குழம்பு ரெடி. ட்ரை பண்ணி பாருங்கள்.