இன்றைய கால இளைஞர்கள் பலரும் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் சிக்கன் முக்கிய இடத்தில் உள்ளது. அசைவ உணவு என்றாலே முதல் இடம் சிக்கனுக்கு தான் என்று சொல்லும் அளவுக்கு சாராணமாக சிக்கன் சாப்பிடுவது அதிகரித்துவிட்டது. சிக்கனை வைத்து பலவகையான உணவு வகைகளை செய்கிறார்கள். அந்த வகையில் செப் தாமு செய்த சிக்கன் மிளகாய் வறுவல் செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
சிக்கன் – அரை கிலோ
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
Advertisment
Advertisements
நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 6
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லி இ்லை – ஒரு கைப்பிடி
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வணக்கவும். அடுத்து அதில் கறிவேப்பிலை மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு, சிக்கன் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். இறுதியாக சிறிதளவு தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
சிக்கன் வெந்தவுடன், அதில் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான சிக்கன் மிளகாய் வறுவல் ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.