நைட் அதிகபட்சம் 2 இட்லி... 'நடன புயல்' பிரபுதேவாவின் டயட் பிளான் இதுதானாம்!

ஒரு பேட்டியில் நீயா நானா கோபிநாத், உங்களின் டயட் என்ன என்று கேட்டபோது, எனது டயட் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் என பிரபுதேவா கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் நீயா நானா கோபிநாத், உங்களின் டயட் என்ன என்று கேட்டபோது, எனது டயட் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் என பிரபுதேவா கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
prabhu deva

தமிழ்  சினிமாவில் பன்முக திறமை கொண்ட நட்சத்திரங்களில் முக்கியமானவராக இருக்கும் பிரபுதேவா, தனது டயட் ஷெடியூல் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போமா?

Advertisment

இந்திய சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமாகி, அதன்பிறகு நடன இயக்குனராக மாறிய பிரபுதேவா, அடுத்து நடிகர், இயக்குனர் என பன்முக திறமையுடன் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்களை இயக்கியுள்ள பிரபுதேவா, தற்போது தமிழ், மலையாளம் இந்தி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா, எப்போதுமே ஒரே மாதிரிதான் இருக்கிறார். எப்படி பார்த்தாலும், அவர் உடல் எடை குறைந்த மாதிரியோ அல்லது அதிகரித்த மாதிரியோ தெரியாது. இதற்காக இவர் என்ன சாப்பிடுகிறார்? தனக்கு என்ன டயட்டை கடைப்பிடிக்கிறார் என்பது குறித்து பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அந்த கேள்விகளுக்கு அவரே விளக்கமும் அளித்துள்ளார்.

ஒரு பேட்டியில் நீயா நானா கோபிநாத், உங்களின் டயட் என்ன என்று கேட்டபோது, எனது டயட் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கொஞ்ச நாள் முன்னாடி 3 நாட்கள் டயட்டில் இருப்பேன் 4-வது நாள் சாப்பிட்டுவிடுவேன். திரும்ப 3 நாட்கள் டயட் 4-வது நாள் சாப்பிடுவேன். இதையே சிலர் 20 நாட்களுக்கு ஒருமுறை கூட செய்வார்கள். ஆனால் நான் அப்படி இல்லை.
ஆனால் இப்போது காலையில் ஓட்ஸ் அதன்பிறகு ஏதாவது ஜூஸ் சாப்பிடுவேன்.

Advertisment
Advertisements

மதியம் சாப்பாடு சாப்பிட மாட்டேன். மாப்பிள்ளை சம்பா, மற்றும் குதிரைவாலி ஆகியவற்றை 2 ஸ்பூன் மட்டும் எடுத்துக்கொள்வேன். மாலையில் 7 மணிக்குள் சாப்பிட்டுவிவேன். அதுவுமு் சாலட், 2 இட்லி மட்டும் சாப்பிவேன் என்று கூறியுள்ளார். உடலையே வில்லாக வளைத்து நடனமாடுவதில் வல்லவராக இருக்கும் பிரபுதேவ தினமும் சாப்பிடும் உணவுப்பட்டியல் இதுதான். 

Heart health foods to consume everyday

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: