வெள்ளை நிற தொப்பியுடன் செஃப்கள்... இப்படி அணிந்து கொண்டு சமைப்பது ஏன் தெரியுமா?

உணவகங்களில் சமைக்கும் செஃப் வெள்ளை நிற தொப்பி வித்தியாசமாக அணிந்திருப்பது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா?

உணவகங்களில் சமைக்கும் செஃப் வெள்ளை நிற தொப்பி வித்தியாசமாக அணிந்திருப்பது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா?

author-image
WebDesk
New Update
Chef Tag

பொதுவாக ரெஸ்டாரண்ட், ஹோட்டல் போன்ற உணவகங்களில் சமையல் செய்பவர்கள் முதல் உணவுகளை பறிமாறுபவர்கள் வரை அனைவரும் தொப்பி அணிந்திருப்பார்கள். இந்த தொப்பி எதற்காக என்று நாம் யோசித்துண்டா? உணவு பறிமாறும்போது அதில் முடி விழுந்துவிட கூடாது என்பதால், தொப்பி அணிந்திருப்பதாக சொல்வார்கள். அதேபோல் சமைக்கும்போது உணவில் முடி விழாவில் இருக்க செஃப்கள் தொப்பி அணிவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Advertisment

அதே சமயம் மற்றவர்கள் அணியும் தொப்பியை விட, செஃப்கள் அணியும் தொப்பி சற்று வித்தியாசமாக இருக்கும். இது ஏன் தெரியுமா? இதன் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. உணவகங்களில் உணவு தயாரிக்கும் செஃப்கள் வெள்ளை நிற தொப்பியை அணிந்திருப்பார்கள். இந்த தொப்பி ஒருவரை விட மற்றொருவருக்கு சற்று நீளமாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். இதற்கு காரணம், மிக நீளமான தொப்பிகளை அணிந்திருப்பவரே அங்கு உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் என்பது அர்த்தம்.

இந்த தொப்பி அணியும் வழக்கம் 18-ம் நூற்றாண்டில், பிரான்சில் உருவாகியுள்ளது. இதனை தொப்பி என்று சொல்வதைவிட, டேக் என்று தான் சொல்ல வேண்டும். இதனை முதன்முதலில் அணிந்தவர் செஃப் மேரி ஆன்டோயின் கேர்ம் என்பவர் தான். அவர் தான் செஃப்களுக்கு வெள்ளை நிற டோக்கையும், கோட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளார். சமைக்கும் நபர் சுத்தமாக இருப்பதை வெளிக்காட்டும் வகையில் தான் இந்த டேக்கும், கோட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.

அதே சமயம் இந்த டேக் வருவதற்கு முன்னதாக, செஃப்கள் உணவில் தங்கள் முடி விழுந்துவிடாமல் இருக்க, சாதாரணமான தொப்பிகளையே பயன்படுத்தியுள்ளனர். ஆனால், எப்போதும் வெப்பமாக இருக்கும் சமையலறையில், அதிகமாக வியர்வை வந்து இந்த தொப்பி அணிந்திருப்பதால் பாதிப்பு அதிகமாகியுள்ளது. ஆனால் இந்த டேக் அணிவதால், மேலே காற்றோற்றமாக இருக்கும். இதனால் அவர்கள் எவ்வித அசௌகரியமும் இல்லாமல் வேலை செய்துள்ளனர்.

Advertisment
Advertisements

செஃப்கள் பயன்படுத்தும், டோக்கில் பல வகைகளும், அந்த வகைகயாள டேக்களுக்கு சரியாகன காரணமும் இருக்கிறது. அதேபோல் அந்த டேக்கில் உள்ள மடிப்புகளுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். ஒரு செஃப் அணிந்திருக்கும் டேக்கில் 100 மடிப்புகள் இருந்தால், அவர் ஒரு முட்டையை வைத்து 100 வகையாக உணவுகளை தயாரிக்கும் திறமை உள்ளவர் என்பது அர்த்தம். 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: