சாதம் வடிக்க இட்லி பாத்திரம்... அட இந்த டெக்னிக் நல்லாருக்கே!
சாதம் வடிக்கும்போது சரியான பதத்தில் வடிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் சாப்பாடு சரியாக இருக்கும். கொஞ்சம் குழைந்துவிட்டாலும், சாப்பிடுவதற்கு சற்று சிரமமாக இருக்கும்.
மனித உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவு என்பது முக்கியமான ஒன்று. சத்தான உணவை எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதே சமயம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, 3 வேளையும் ஒவ்வொரு வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். நகரத்தில் காலையில், இட்லி தோசை, மதியம் சாப்பாடு, இரவில் சப்பாத்தி, தோசை, என 3 வேளையும் தனித்தனியாக உணவு சாப்பிடும் நடைமுறை இருக்கிறது.
Advertisment
அதே சமயம், கிராமத்தில், 3 வேளையும் அரிசி சாதத்தை சாப்பிடும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் சாதம் வடிக்கும்போது சரியான பதத்தில் வடிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் சாப்பாடு சரியாக இருக்கும். கொஞ்சம் குழைந்துவிட்டாலும், சாப்பிடுவதற்கு சற்று சிரமமாக இருக்கும். இதனால் சாதம் வடிக்கும்போது, எச்சரிக்கையாக செய்வார்கள். அதேபோல் சாதம் குழைந்துவிடாமல் இருக்க, எண்ணெய் ஊற்றி சமைப்பது என பல முயற்சிகள் ஈடுபடுவார்கள்.
அந்த வகையிலான ஒரு வழியை இப்போது பார்ப்போமா, சாதம் பதமாக வடிக்க தெரியாதவர்கள், பேச்சிலர்கள் சீக்கிரமாக சமைக்க, இ்நத வழியை பயன்படுத்தலாம். இட்லி பாதிரத்தில் இட்லி மட்டும் தான் செய்ய முடியுமா என்ன? இந்த மாதிரி சாதமும் செய்யலாம். இட்லி பாத்திரத்தில், இட்லிக்கு வைக்கும் தண்ணியைவிட சற்று அதிகமாக தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதற்கு முன்னதாக அரிசியை ஊறவைத்து, ஒரு பாத்திரத்தில் கழுவி எடுத்துக்கொள்ளவும்.
Advertisment
Advertisements
இட்லி பாத்திரத்தில் வைத்த தண்ணீர் நன்றாக கொதித்தவுடன், அதை திறந்து அதற்கு நடுவில், ஊறவைத்து குழுவிய அரிசியை தண்ணீருடன் சேர்த்து தனியான ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரில் வைத்து இட்லி பாத்திரத்தை முடிவிடவும். சுமார் அரைமணி நேரம் கழித்து அதை திறந்து பார்த்தால், சாதம் உதிரியாக வெந்திருக்கும். குக்கரில் சாதம் வைப்பதை விட இந்த முறையில் சாதம் வைத்தால், விரைவாக தயாராகும். சாதமும் உதிரியாக வரும்.